Homeசெய்திகள்அரசியல்சட்டப்பேரவையிலேயே செங்கோட்டையனை ஓரம் கட்டிய 4 எக்ஸ் அமைச்சர்கள்: தர்ம சங்கடத்தில் எடப்பாடியார்..!

சட்டப்பேரவையிலேயே செங்கோட்டையனை ஓரம் கட்டிய 4 எக்ஸ் அமைச்சர்கள்: தர்ம சங்கடத்தில் எடப்பாடியார்..!

-

- Advertisement -

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சமாதானப்படுத்த அதிமுக மூத்த தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் சமாதான முயற்சியில் தற்போது ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை வளாகத்திற்கு உள்ளே கூட்டம் நடைபெறும் லாபிக்கு அருகில் தேனீர் அருந்தக்கூடிய இடத்தில் நான்கு அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது தொகுதி சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை, சட்டசபையில் எழுப்பினார். அதற்கான பதிலையும் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அவரை மூத்த நிர்வாகிகள் நான்கு பேரும் சேர்ந்து ”உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். வெளியே வாருங்கள்” என்று தனியே வெளியே அழைத்துச் சென்றார்கள்.

sengottaiyan தற்போது சட்டப்பேரவைக்கு வெளியிலே கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகிய நான்கு பேரும் அமர்ந்து ஆவேசமாக பல்வேறு விஷயங்களை பேசினர். செங்கோட்டையன் தரப்பிலே என்னென்ன விஷயங்கள், மனக்குறைகள் இருக்கிறது? ஏன் கோபமாக இருக்கிறேன் என்கிற விவரங்களை எடுத்துக் கூறினார். அதற்கு முன்னாள் அமைச்சர்கள், ”இதையெல்லாம் பேசி சரி செய்து கொள்ளலாம். நீங்கள் தொடர்ச்சியாக அதிமுக எதிர்க்கட்சி தலைவர் கூட்டத்தை தவிர்ப்பது மிகப்பெரிய விவாதமாக மாறிவருகிறது என்று எடுத்துச் சொன்னார்கள்.

இன்னும் சற்று நேரத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது. அப்படி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஒருவேளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடுநிலை வகிப்பதாகவோ அல்லது இந்த தீர்மானத்திற்குதான் ஆதரவு தரவில்லை என்று சொல்லிவிட்டாலோ, அது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பும். அதிமுகவிற்கு அது உச்சபட்ச தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.

எனவே அது போன்ற விஷயங்கள் எல்லாம் நடைபெற கூடாது. ஒற்றுமையாக செயல்பட வேண்டும். உங்களுக்கு என்ன மனக்குறை இருக்கிறது என்பதை கூறுங்கள். சரி செய்து விடலாம் என்கிற ரீதியில் நான்கு முன்னாள் அமைச்சர்களும் சேர்ந்து செங்கோட்டையனிடம் சமாதான படலத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அவரிடம் இவர்கள் சமாதானம் பேசி இருந்தாலும் செங்கோட்டையனின் கோபம் தனியவில்லை. அதேபோல இன்று காலை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை செங்கோட்டையன் இல்லத்திற்கு அனுப்பி இருந்தார்கள். செங்கோட்டையன் எங்கே வராமல் போய்விடுவாரோ என்ற காரணத்தால் அக்ரிகிருஷ்ணமூர்த்தியை அவரது இல்லத்திற்கு அனுப்பியதாக கூறுகிறார்கள். இதனை தொடர்ந்து அக்ரிகிருஷ்ணமூர்த்தியும், செங்கோட்டையனும் ஒரே காரில் வந்து சட்டசபையில் இறங்கினர்.

MUST READ