Homeசெய்திகள்அரசியல்அரிட்டாபட்டிக்கு ஒரு நியாயம்... பரந்தூருக்கு ஒரு நியாயமா..? ஆவேசப்பட்ட விஜய்..!

அரிட்டாபட்டிக்கு ஒரு நியாயம்… பரந்தூருக்கு ஒரு நியாயமா..? ஆவேசப்பட்ட விஜய்..!

-

- Advertisement -
kadalkanni

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிக் கொண்டிருக்கும் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் அரிட்டாபட்டிக்கு ஒரு நியாயம்… பரந்தூருக்கு ஒரு நியாயமா..? என ஆவேசப்பட்டார்.

கேரவனில் இருந்தபடி அப்பகுதி மக்களிடம் பேசிய அவர்”ஒரு முக்கியமான விஷயத்தை நம்மை ஆண்டு கொண்டிருக்கிற, ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இங்கு வளர்ச்சிக்கு எதிரானவலாம் கிடையாது. ஏர்போர்ட்டே வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்று தான் சொல்கிறேன். நான் இதை சொல்லவில்லை என்றால் இவன் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று ஏதாவது சொல்லி கதையை கட்ட ஆரம்பிப்பார்கள்.

இன்றைக்கு இந்த பூமியில் வாழ்கின்ற எல்லா உயிரினங்களின் இருப்பையும் புவி வெப்பமாதல் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இங்கு இருக்கிற 90 சதவீத விவசாய நிலங்களை அழித்து அதில் ஏர்போர்ட் கொண்டுவர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கிற அரசு மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும். சமீபத்தில் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் ஒன்று கொண்டு வந்தது. அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

ஆனால் அதே நிலைப்பாட்டை தானே இங்கு நாம் பரந்தூர் பிரச்சனையிலும் எடுத்திருக்க வேண்டும்… எடுக்கணும்… அதே மாதிரி தானே பரந்தூர் மக்களும். இப்படித்தானே ஒரு அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லையே… ஏன் செய்யவில்லை? ஏனென்றால் இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்தத் திட்டத்தில் அவங்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அதை நம்ம மக்கள் தெளிவா புரிஞ்சு வச்சிருக்காங்க.

நமது ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே இங்கேயும் எடுக்கணும். அது எப்படி நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு. அதே ஆளுட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? எனக்கு புரியலையே… அதனால இனிமேலும் சொல்றேன். உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் - போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

நீங்கள் உங்க வசதிக்காக அவங்களோடு நிற்கிறதும், அவங்களோட நிக்காம போறதும்… நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதும்… அது சரி, நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் தான் நீங்கள் கில்லாடி ஆச்சே. விவசாயிகள் போராட்டம் நடத்தினால் பிரச்சனை தான். அதனால இனிமே உங்க நாடகத்தை பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் கேட்டுக்கொள்கிறேன். பாதிப்புகள் குறைவாக இருக்கக்கூடிய இடங்களாக பார்த்து உங்களுடைய விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி தான் மக்களை முன்னேற்றும். ஆனால் அந்த வளர்ச்சி என்ற பெயரில் நடக்கின்ற அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும். நீங்கள் எல்லோரும் உங்களுடைய ஊர் கிராம தேவதைகளான எல்லையம்மன் மீது ரொம்பவே நம்பிக்கை வச்சிருக்கீங்க என்று எனக்கு தெரியும். அந்த நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

நான் ஏன் ஊருக்குள் வர தடை என்று எனக்கு தெரியவில்லை. இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம பிள்ளைக துண்டுச் சீட்டு கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. அதனால் நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார்.

MUST READ