Homeசெய்திகள்அரசியல்அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டு உயிர் வாழும் கட்சி பாமக - நாஞ்சில் சம்பத்

அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டு உயிர் வாழும் கட்சி பாமக – நாஞ்சில் சம்பத்

-

- Advertisement -

அரசியல் செயல் பாடுகள் எதுவும் இல்லாமல் தினம் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு கட்சி உயிரோடு இருக்கிறது என்று காட்டிக்கொண்டு இருப்பவர்கள் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ்  என்று திராவிட இயக்க சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டு உயிர் வாழும் கட்சி பாமக - நாஞ்சில் சம்பத்

இந்திய தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதுகுறித்து செய்தியாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு முதலமைச்சர் பதில் அளிக்கும் போது, டாக்டர் ராமதாஸ்க்கு வேறு வேலை இல்லை. அவர் தினமும் ஏதாவது ஒரு அறிக்கையை விட்டுக் கொண்டிருப்பார் என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டிருந்தார். அப்படி வருத்தம் தெரிவிக்காவிட்டால் எங்கள் தொண்டர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியாது என்று பேசினார். இன்று பாமக சார்பில் திருவண்ணாமலை, விருத்தாசலம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம் என்று சில இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் கடந்த காலங்களில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், ஓ.பன்னீர்செல்வம் குறித்தும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்திருந்தார்கள். குறிப்பாக டாக்டர் ராமதாஸ் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசும்போது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறித்து மிகவும் தரம் தாழ்ந்து பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இப்படி அனைத்து தலைவர்களையும் மரியாதை குறைவாக பேசுகின்றவர்கள், மரியாதை குறித்து மற்றவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு தகுதியில்லாதவர்கள் என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் துறை சார்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி தெளிவு படுத்திய பின்னர் மீண்டும் அதுகுறித்து அறிக்கை விடுவது நாகரிகமற்ற செயல்.

அதானி ஊழல் பிரச்சினையில் மருத்துவர் ராமதாஸ் திசை திருப்ப முனைகிறார் –  வைகோ

தமிழ்நாட்டில் அப்பாவும் மகனும் எந்த கட்சியோடு கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். அதிமுக தயவில் மேலவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டு மக்களுக்காக செய்த செயல் என்ன? குறைந்த பட்சம் அதிமுக விற்காவது விசுவாசமாக இருந்தார்களா என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர்கள் நாள்தோறும் வெறும் அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டு கட்சி உயிரோடு இருப்பதாக காட்டிக்கொள்ளும் அரசியல் வாதிகள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

MUST READ