அரசு திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தீவிர முயற்சி – உதயநிதி ஸ்டாலின்
அரசு அளித்துள்ள திட்டங்களை மக்களிடத்தில் சீக்கிரம் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அனைத்து துறை வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் பல்வேறு துறைகளை சேர்ந்த 912 பயனாளிகளுக்கு சுமார் 36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு திட்டங்கள் தொடர்பாக மாவட்டம் தோறும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், அரசு நிறைய திட்டங்கள் கொடுத்திருப்பதால் அந்தந்த திட்டங்கள் எந்த அளவுக்கு நடைபெற்று வருகிறது.
அதில் சிறப்பாக நடைபெற்ற திட்டங்களுக்கு பாராட்டுகளும், தொய்வு ஏற்பட்டுள்ள திட்டங்களை மேற்கொண்டு அதிகாரிகள் முடிப்பதற்கான தேதிகளை பெறப்பட்டிருப்பதாகவும், இன்று ஆய்வு மேற்கொண்ட துறை வாரியான திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் முதலமைச்சர் அலுவலகத்தில் அளிக்கப்படும் எனவும் கூறினார்.
காலை உணவு திட்டம் தொடர்பாக தினமலர் நாளிதழ் விமர்சனம் செய்திருப்பது தொடர்பான கேள்விக்கு உங்கள் கருத்து தான் என்னுடைய கருத்து என அவர் தெரிவித்தார்.