Homeசெய்திகள்அரசியல்விஜயின் விரலை வைத்தே கண்ணைக் குத்த பக்கா ஸ்கெட்ச்: திமுக மாஸ்டர் ப்ளான்..!

விஜயின் விரலை வைத்தே கண்ணைக் குத்த பக்கா ஸ்கெட்ச்: திமுக மாஸ்டர் ப்ளான்..!

-

- Advertisement -

நடிகர் விஜயின் மக்கள் தொடர்பாளராகவும், அவரதுன் வலது கரமாகவும், பல ஆண்டுகளாக செயல்பட்டவர் பி.டி.செல்வகுமார். அந்த பாசத்தில் தான் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளர் வாய்ப்பை அவருக்கு வழங்கினார் விஜய். புலி பெரிய ஹிட் ஆகவில்லை. பல்வேறு சிக்கல்கள். பின்னர், விஜயிடம் இருந்து பிரிந்தார் செல்வகுமார்.

பல படங்களை தயாரித்தார். இப்போது கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில் விஜயை எதிர்த்து அவர் நிற்கப்போகிறார். அவரை அப்படி நிறுத்த சில அரசியல்கட்சிகள் திட்டமிடுகின்றன என்று செய்திகள் வரும் நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் பி.டி.செல்வகுமார்.

‘‘ஆரம்ப காலத்தில் விஜயுடன் இருந்த நீங்க, இப்போது ஏன் அவருடன் இல்லை என்று பலரும் கேட்கிறார்கள். எப்போதும், எல்லாரும் ஒன்றாக இருக்க முடியாது. குடும்பத்தில் கூட ஒற்றுமையாக இருக்க முடியாது. கால சூழல் அப்படி. புலி படத்தை நான் தயாரித்தேன். அந்த படத்தால் எனக்கு ஏகப்பட்ட இழப்பு. அதிலிருந்து மீண்டுவிட்டேன். அதேசமயம் விஜயின் வளர்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என் சகோதரர் மாதிரி. அதை நான் ரசிக்கிறேன். அவர் த.வெ.க அழைத்தால் போவீர்களா என கேட்கிறார்கள். அவர் கூப்பிடட்டும்.

தவெக என்பது புது கட்சி. விஜய் அரசியலுக்கு புதிது. தமிழகத்தில் புதுசாக ஒருவர் வர வேண்டும். நல்லது செய்ய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அவர் அடுத்த தேர்தலில் முதல்வர் ஆவாரா? அவர் கூட்டணி வைப்பாரா? தனித்து போட்டியிடுவாரா என தெரியவில்லை. அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. ஆகவே, அவர் நிலைப்பாடு குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. காலம் செல்ல, செல்ல அதற்கான முடிவை எடுப்பார்.

நான் விஜய், அவர் தந்தை எஸ்.ஏ.சி ஆகியோருடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், என்னை வேலைக்கு வைத்தவர், என் குருநாதர், என் முதலாளி எஸ்.ஏ.சிதான். நான் அவருக்குத்தான் கீழ்ப்படிவேன். அதேசமயம் விஜயை மதிப்பேன். ஆகவே, என்னை வேலைக்கு வைத்த எஸ்.ஏ.சிக்கு தொடர்ந்து மரியாதை கொடுப்பேன். அவருக்கு ஆதரவாக செயல்படுவேன். 2026 சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட நினைக்கிறேன். எந்த கூட்டணியில் வாய்ப்பு தருகிறார்களோ, அவர்களுடன் இணைவேன். நான் விஜய்க்கு எதிராக களம் இறங்குவேனா என தெரியவில்லை. திமுக ஆதரவு கொடுப்பதால், விஜய்க்கு எதிராக நீங்க நிற்பீர்களா? என கேட்கிறார்கள். அதற்கு பதில் இல்லை. விஜய் கூட எனக்கு வாய்ப்பு தரலாமே? கன்னியாகுமரியில் விஜய் நின்றால், அவருக்கு ஆதரவாக பணியாற்றுவேன்.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஒருகாலத்தில் எஸ்.ஏ.சி-யிடம் நான் வேலைக்கு வைத்த ஆள் அவர். அதேசமயம், பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுப்பதை நான் ஆதரிக்கவில்லை. அவர் தனது சொந்த மாநிலத்தில் ஜெயிக்கவில்லை. இங்கே இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அந்தவகையில் பலர் த.வெ.க-வை தவறாக நடத்துகிறார்கள். அவர்களால் பேஸ்புக்கில் பில்டப் கொடுக்கலாம். களப்பணியில் இருப்பவர்கள்தான் தவெகக்கு தேவை. அந்த காலத்தில் காமராஜ், எம்ஜிஆர் இந்த மாதிரி அரசியல் வியூகம் வகுத்தார்களா?

நான் கொடுத்த திட்டங்கள் குப்பையில் போடப்பட்டது. பணம் கொடுத்தால்தான் தவெகவில் பதவி என்கிறார்கள். அது உண்மையா? பொய்யா என தெரியாது. இது குறித்து விஜய் கடும் அறிக்கை விட்டு இருக்கிறார். தவறான ஆட்கள் மீது நடவடிக்கை எடுப்பார்.

நான் கலப்பை மக்கள் இயக்கத்தை ஏழை மாணவர்கள், விவசாயிகளுக்காக நடத்தி வருகிறேன். இது அரசியல் கட்சி அல்ல. ஆனால், சமீபத்தில் என்னை தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைத்தது. அதற்காக முதல்வருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ