விஜய் முன்னிலையில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவியும் அதிமுகவிலிருந்து விலகி தவெக இணைந்த நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கபட்டது.
தமிழக வெற்றிக் கழக மூன்றாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் தேர்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் மாற்றுக் கட்சியினர் கட்சிகளில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர்கள் தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியில் இணைந்தவர்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார்.
விசிக விலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவியும், அதிமுகவிலிருந்து விலகிய CTR நிர்மல் குமாருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது அதேபோல பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலும் சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஐடி வின்க் இணை செயலாளராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தவெகவில் இணைந்த அதிமுக புள்ளி – ஆதவ் அர்ஜுனா… விஜய் வழங்கும் முக்கியப் பதவி..!