மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை எப்படி திமுகவில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது விசிகவை அழித்து வருவதாக கூஇ இருந்தார் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா. அதற்கு பதிலடி கொடுத்துள்ள திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன் ”தலீவரை (ரஜினி) B டீம் ஆக்கி.. கட்சி ஆரம்பிக்க சொல்லி அவரை காலி செய்தது போல, அண்ணனை.. (சீமானை) பெரியாருக்கு எதிராக பேசவிட்டு.. டெபாசிட் டை காலி செய்தது போல, சுறா (விஜய்) வீட்டில் ரெய்டு விட்டு.. இப்போது பி டீமாக இருக்க சொல்லி.. காலி செய்வதை விடவா? எனத் தெரிவித்துள்ளார்.
”அதிமுக- பாஜக கூட்டணி குறித்ட்துேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என அமித் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ப்ளூசட்டை மாறன், ”உண்மையான பாசிசமும், பாயாசமும்: 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது அதிமுக. பிரச்சார நேரத்தில், மசூதி வாசல்களில் நின்று வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக அமைச்சர்கள் உட்பட அனைவரையும் விரட்டி அடித்தனர் இஸ்லாமியர்கள். அதிமுக தேர்தலில் தோற்றது.
இப்போது சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை எனும் முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல. விஜய்க்கு உண்மையாகவே திராணி இருந்தால், இதை விமர்சிக்க வேண்டும். ஆனால், இதுவரை வாய் திறக்கவில்லை.
அதிமுக பாயாசம் என்றால்… என்டிஏ எனும் பாயாச அண்டாவில் மிதக்கும் ஜவ்வரிசிதான் இந்த தவெக.
நேற்று நடந்த தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தவெக கொள்கைபரப்புச் செயலாளர் ராஜ்மோகன், ”ஆதவ் அர்ஜூனா 2021 தேர்தலில் திமுகவிற்கு 500 கோடி தந்தபோது வாங்கியது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த திமுகவை சேந்த வழக்கறிஞர் சரவணன், ”அப்படிப்பட்ட ஆதவ் அர்ஜுனாவை உங்கள் கட்சியில் சேர்த்தது ஏன்? எனக் கேட்டு திகைக்க வைத்த நிகழ்வையும் தனது எக்ஸ்தளப்பதிவில் பகிர்ந்துள்ளார் ப்ளூ சட்டைாறன்.