ஓபிஎஸ் மாநாடு- அதிமுக தரப்பில் புகார்
திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.
வருகிற 24-ஆம் தேதி திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவும், ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையிலும், கட்சியின் 51வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் முப்பெரும் விழாவை பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் மாபெரும் மாநாடாக நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த புகாரில், திருச்சி ஜி கார்னரில் ஓபிஎஸ் தரப்பில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள மாநாட்டில் அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதையும் தேர்தல் ஆணையம் ஏற்றது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.