Homeசெய்திகள்அரசியல்ஓபிஎஸ் அணி செத்த பாம்பு- எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ் அணி செத்த பாம்பு- எடப்பாடி பழனிசாமி

-

- Advertisement -

ஓபிஎஸ் அணி செத்த பாம்பு- எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ் அணி செத்த பாம்பை போன்றது, இனி அ.தி.மு.க என்றால் நாங்கள் தான் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

kc

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் மாற்றுக் கட்சிகளில் இருந்து அ.தி.மு.க வில் இணையும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்ற இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் கொடிகட்டி பறந்த வைத்திலிங்கம், ஜெயலலிதா முதல்வராக இருந்த போதோ, நான் முதல்வராக இருந்தபோதும் எதையும் கேட்டு தஞ்சை மாவட்ட மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ, கட்சி தொண்டர்களுக்கோ எதையும் செய்யவில்லை. விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் சேற்றில் இறங்கினால் தான் சோறு. பணத்தை வறுத்து சாப்பிட முடியாது.

அ.தி.மு.க தொண்டர்கள் ஒரு போதும் ஓ.பி.எஸ்- ஐ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஓ.பி.எஸ் செத்த பாம்பு, அ.தி.மு.க என்றால் அது நாங்கள் தான். டி.டி.வி. தினகரனை, ஜெயலலிதா 10 ஆண்டுகாலம் ஒதுக்கி வைத்திருந்தார். உயிரோடு இருக்கும் வரை டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்க்க மாட்டேன் என ஜெயலலிதா கூறியிருந்தார். அன்றைக்கு துரோகியாக இருந்தார். ஆனால் இப்போது டி.டி.வி தினகரனோடு ஓ.பி.எஸ் கை குலுக்கியிருக்கிறார். டி.டி.வி. தினகரனால் ஒருபோதும் அ.தி.மு.க வை கைப்பற்றவே முடியாது” என்றார்.

MUST READ