Homeசெய்திகள்அரசியல்விருப்பம் இல்லை என்றால் கூட்டணியைவிட்டு பாஜக வெளியேறலாம்- சிவி சண்முகம்

விருப்பம் இல்லை என்றால் கூட்டணியைவிட்டு பாஜக வெளியேறலாம்- சிவி சண்முகம்

-

விருப்பம் இல்லை என்றால் கூட்டணியைவிட்டு பாஜக வெளியேறலாம்- சிவி சண்முகம்

அண்ணாமலை தனி நோக்கத்துடன் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

cv shanmugam

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், “ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும் தராதரமும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ சட்டமன்ற உறுப்பினராகவோ ஏன் கவுன்சிலராகவோ கூட அண்ணாமலை இருந்ததில்லை. அண்ணாமலை தனி நோக்கத்துடன் செயல்படுகிறார். பாஜக வேறு, அண்ணாமலை வேறு. அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று அமித்ஷா சொல்லும்போது அண்ணாமலை அமைதியாக இருந்தது ஏன்? மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

விருப்பம் இல்லை என்றால் கூட்டணியைவிட்டு பாஜக வெளியேறலாம். அதிமுக பிடிக்காவிட்டால் அண்ணாமலை விலகிகொள்ளலாம். கொலை, பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களுக்கு பதவி கொடுத்தவர் அண்ணாமலை. குற்றவாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு பதவி கொடுக்கிறார். அண்ணாமலை மீது அவர் கட்சியை சேர்ந்தவர்களே புகார் கொடுத்துவருகிறார். ஊழலை பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ எந்த தகுதியும் கிடையாது. ஊழலுக்காக கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாஜக கட்சியில்தான்.40 சதவீத கமிஷன் பெற்ற ஆட்சி என்றால் அது பாஜக ஆட்சிதான்” எனக் குற்றஞ்சாட்டினார்.

MUST READ