‘வைத்திலிங்கம் திமுகவுக்கு விலை போய்விட்டார்’ – ஜெயக்குமார்
கள்ளச்சாராய விற்பனை திமுக ஆட்சியில் பெருகிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திமுகவுக்கு விலை போய்விட்ட வைத்திலிங்கம் அதிமுகவை விமர்சிப்பதை ஏற்கமுடியாது. வைத்திலிங்கம் ஊழலில் சிக்கியிருப்பதால் அதிலிருந்து தப்பிக்க திமுக பி டீமாக மாறிவிட்டார். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் இருந்ததால் தான் கடந்த கால தேர்தலில்களில் அதிமுக தோல்வி அடைந்தது. அதிமுக அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்தவர் வைத்திலிங்கம். விளையாட்டு பிள்யைாக இருக்கலாம், வைத்தியலிங்கம் போன்று விளங்காத பிள்ளையாக இருக்கக்கூடாது. திமுக கூட்டணியில் இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை.
கள்ளச்சாராய விற்பனை திமுக ஆட்சியில் பெருகிவிட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவன் பணக்காரனாக இருக்கிறான். அவனிடம் இருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதி வாங்கிக் கொடுக்காமல் அரசு வரிப்பணத்தை வழங்குவது தவறை மூடி மறைக்கும் செயல்.கருணாநிதி என்ன திருவள்ளுவரை போல் உலகப்பொதுமறை படைத்தாரா? மக்கள் வரியை வாங்கி உங்க அப்பாவுக்கு நினைவுச்சின்னம் வைக்கணுமா? பேய் ஆண்டால் பிணம் தின்னும் என்பதை போல் இன்று தமிழகத்தில் ஒரு காட்டாட்சி நடந்து கொண்டிருக்கிறது.” எனக் கூறினார்.