அதிமுக திமுகவுக்குள் நடப்பது பங்காளி சண்டை– கே.பி.முனுசாமி
அடுத்த மாதம் 20-ஆம் தேதி மதுரையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தலைமை கழக நிர்வாகிகள் நேரில் சென்று கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்களை சந்தித்து கூட்டம் நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமைக்களாக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “விபத்தால் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றார். அவர் செய்த தவாறால் ஆட்சியை இழந்தார். தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட அதிமுகவே தவிர திமுக கிடையாது. அதிமுகவில் செய்த தவறால் ஏற்பட்ட விபத்தால் தான் திமுக ஆட்சிக்கு வர நேரிட்டது. அதிமுக இரண்டாக பிளவுபட்டதால் திமுக ஆட்சியை பிடித்து கருணாநிதி முதல்வரானார். விபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில்ம் அதிமுக செய்த நல்ல திட்டங்கள் மறுக்கவும் மறைக்கவும் படுகிறது.
ஸ்டாலின் மகனும், மருமகனும் சேர்ந்து கட்சிகள் செய்த தவறு காரணமாக தான் ரூ.30 ஆயிரம் கோடி உங்களுக்கு வந்தது. இதனை திமுக அமைச்சர் ஒருவரே தெரிவித்துள்ளார். தேசிய கட்சிகள் எப்படி வந்தாலும் தமிழக மக்கள் ஏற்றுகொள்வதில்லை. தற்போது திறமைமிக்க தலைவரை தேசிய கூட்டணியின் தலைவராக ஏற்றுகொண்டிருக்கிறோம். திமுகவும் அதிமுகவுக்கும் தான் தமிழகத்தில் நேரடி போட்டி. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ளது பங்காளி சண்டை” என்றார்.