Homeசெய்திகள்அரசியல்அதிமுக மாநாட்டை கண்டு திமுக பயந்துவிட்டது- செல்லூர் ராஜூ

அதிமுக மாநாட்டை கண்டு திமுக பயந்துவிட்டது- செல்லூர் ராஜூ

-

அதிமுக மாநாட்டை கண்டு திமுக பயந்துவிட்டது- செல்லூர் ராஜூ

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை வரவேற்கிறோம், ஆனால் திட்டம் சரியாக செயல்படுத்தப்பட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

sellur raju

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டுக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிரியாணி விருந்தளித்தார். அதன்பின் தேமுதிகவில் இருந்து 250 பேர் அவரது தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ”மாநாடு சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி. அஷ்டலட்சுமியே வந்தாலும் மூக்கு, முழி சரியில்லை என்று சொல்வார்கள். 10 அண்டா புளியோதரை வீணாகப் போனதை குறை சொல்கிறார்கள். எந்த விழாவில் உணவு மீதமாகாமல் போயுள்ளது. சமையல்காரன் ஏதோ தவறு செய்து விடுகிறான், அதுவா பெரிது. அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டோம். குறைசொல்ல விழைபவர்கள் எப்படியாவது சொல்லத்தான் செய்வார்கள்.

அதிமுக மாநாட்டை கண்டு திமுக பயந்துவிட்டது. அந்த பயத்தில்தான், டிசம்பர் மாதம் திமுக எழுச்சி மாநாடு நடத்த உள்ளது. ஆனால் அது தானா சேர்ந்த கொள்கை கூட்டமாக இருக்காது. நாங்களே கொள்கை கூட்டம் நடத்தினோம். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை வரவேற்கிறோம், ஆனால் திட்டம் சரியாக செயல்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

MUST READ