- Advertisement -
திருச்சி மாநாட்டில் சசிகலா பங்கேற்பு- ஓபிஎஸ் அதிரடி
திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு சசிகலா உள்ளிட்ட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வருகிற 24 ஆம் தேதி திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில், டிடிவி தினகரன், சசிகலா உட்பட கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் உட்பட பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளதாக முன்னாள் முதலமைச்சர்.ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “வருகிற 24-ஆம் தேதி திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவும், ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையிலும், கட்சியின் 51வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் முப்பெரும் விழாவை பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடத்த உள்ளோம். இதில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் உட்பட சசிகலா, மற்றும் டிடிவி தினகரன் உட்பட அனைவரும் கலந்து கொள்வார்கள்” என்றார்.