‘பொதுக்கூட்டம் வெற்றி; புளியோதரை தோல்வி’- ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், “அதிமுக மாநாடு ஜெயிலர் படத்தை விடவும் எழுச்சி வெற்றியை பெற்றுள்ளது. மதுரை மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டனர். அதிமுக மாநாட்டிற்கு 50 லட்சம் பேர் வர திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறையின் குளறுபடியால் 35 லட்சம் தொண்டர்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. தொண்டர்கள் அதிகளவு வருவார்கள் என அவசர கதியில் அதிகமாக உணவு சமைக்கப்பட்டதன் காரணமாகவே உணவு மிஞ்சியது.
பொதுக்கூட்டம் வெற்றி பெற்றதால் புளியோதரை தோல்வியை பெரிதுப்படுத்துகின்றனர். மாநாடு வெற்றியை நாங்கள் பேசுகிறோம். புளியோதரை வேகவில்லை என நீங்கள் பேசுகிறீர்கள். பாத்திரம் எடுத்துச் சென்றவர்கள் மீதமிருந்த உணவை கீழே போட்டுவிட்டு சென்றனர்” என்றார்.