Homeசெய்திகள்அரசியல்அதிமுக,தவெக கூட்டணி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுக,தவெக கூட்டணி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

-

அதிமுக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது? கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுருக்கமாக பதிலளித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மாவட்டம் தோறும் கள ஆய்வு நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சமி அறித்து இருந்தார். ஆய்வு பணிக்கு முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என்று பத்து பேர் கொண்ட குழுவை அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரம் தனியார் மண்டபத்தில் கள ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் மாவட்ட அணி செயலாளர்கள், நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது. அதிமுக வில் கழக அமைப்பு தேர்தல் அல்லது கிளைக் கழத் தேர்தலையாவது நடத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து என்று பேசினார். அப்போது தான் கட்சியினர் மத்தியில் உற்சாகம் இருக்கும் என்றார். மேலும் அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் ஆனால் அதிமுக வை எந்த கொம்பனாலும் அழிக்கமுடியாது.கூட்டணி நம்மை தேடி வரும் அதுப்பற்றி கவலை வேண்டாம். சமூகவளைத்தில் வரும் கருத்துகளை நம்ப வேண்டாம் என்று சி.வி.சண்முகம் பேசினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது,, அதிமுகவில் மற்ற கட்சிகளைப்போல் போதிய அளவு ஐ.டி விங்கியில் உறுப்பினர்கள் இல்லை – பாஜகவை கடுமையாக மீம்ஸ்கள் போட்டு விமர்சிக்க வேண்டும். நம் கூட்டத்திற்கு பெண்களை அதிகமாக அழைத்து வரவேண்டும். உணர்வு பூரமாக உள்ளவர்கள் கட்சி கூட்டத்திற்கு வந்து பணியாற்றினால் போதும். நாம் சுலபமாக வெற்றிப் பெற்று விட முடியும்.

நமது ஐ.டி.விங் பலமாக இல்லை. ஆனால் திமுக , பாஜக வில் அதிக அளவு ஐ.டி.விங் உறுப்பினர்கள் உள்ளனர். அதிக அளவிற்கு மீம்ஸ்கள் போட வேண்டும், குறிப்பாக பாஜக விற்கு எதிராக அதிக அளவு மீம்ஸ்கள் பதிவிட வேண்டும். அவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என கட்சியினருக்கு ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.

கூட்டம் முடிந்து செய்திகளிடம் பேசிய ஜெயக்குமார் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு அது பற்றி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

MUST READ