Homeசெய்திகள்அரசியல்விஜய் கட்சி தவெகவுடன் அதிமுக கூட்டணி என்பது ஊடகங்களின் கற்பனை - முன்னாள் அமைச்சர் பொன்னையன்

விஜய் கட்சி தவெகவுடன் அதிமுக கூட்டணி என்பது ஊடகங்களின் கற்பனை – முன்னாள் அமைச்சர் பொன்னையன்

-

- Advertisement -

தவெகவுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை. அது ஊடகங்களின் கற்பனை என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.விஜய் கட்சி தவெகவுடன் அதிமுக கூட்டணி என்பது ஊடகங்களின் கற்பனை - முன்னாள் அமைச்சர் பொன்னையன்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்னையனிடம் அதிமுக தவெக கூட்டணி தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு, தவெகவுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவில்லை என்றும் அது தவறான செய்தி என்றார்.

தலைவரின் வழியில், தமிழ்தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும் – தங்கதுரை

விஜய் கட்சியுடன் கூட்டணி என அதிமுக எப்போது அறிவித்தது எனவும் கேள்வி எழுப்பினார். கூட்டணியை இறுதி செய்ய இன்னமும் காலம் இருக்கிறது என்றும் கூட்டணி தொடர்பாக பொதுச்செயலாளர் முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டு கூறுவது உட்கட்சி பூசல் கிடையாது கட்சி வளர்ச்சி எனப் பொருள் என்றார். பல கட்சிகளில் இருந்து விஜய் கட்சியில் இணைவது குறித்து கருத்து எதுவும் கூற முடியாது எனவும் பொன்னையன் தெரிவித்தார்.

MUST READ