Homeசெய்திகள்அரசியல்இவர்களை மட்டுஜம் நம்பித்தான் அதிமுக… மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் சொன்ன பதில்

இவர்களை மட்டுஜம் நம்பித்தான் அதிமுக… மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் சொன்ன பதில்

-

- Advertisement -

”அதிமுக யாரை நம்பியும் கிடையாது. மக்களை நம்பி இருக்கிறது. யாரை ஒட்டியும் அரசியல் செய்வது கிடையாது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூரில் இளைஞர் மற்றும் இளம்பாசறை நடைபெற்ற மண்டல மாநாட்டில் தலைமையேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழகத்திலே இளைஞர்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு இயக்கம் அதிமுக. இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா இருக்கும் போது எந்த எழுச்சியை பார்த்தோமோ, அதை எழுச்சி இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் பார்க்கிறோம். வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்… இப்படை தோற்பின் எப்படி வெல்லும்.பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார், அதிமுக அறிக்கை, எடப்பாடி பழனிசாமியினுடைய அறிக்கை பாரதிய ஜனதாவை ஒட்டி இருக்கிறது என்கிறார். திரு. ஸ்டாலின் அவர்களே… பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் சரி, புரட்சித்தலைவி அம்மா அவர்களும் சரி, அதிமுக யாரையும் நம்பி இருந்ததே கிடையாது.

மக்களை நம்பி இருக்கிறது. யாரை ஒட்டியும் அரசியல் செய்வது கிடையாது. அதிமுக, கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் நம்பி இருக்கிறது. ஆனால், திமுக அதனுடைய கூட்டணியை நம்பி இருக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்கள் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆகையால் மக்களை நம்பி இருக்கிற இயக்கம் அதிமுக. ஆகவே நாங்கள் யாரையும் சார்ந்து செல்வது கிடையாது. எங்களை நாடித்தான் மற்றவர்கள் வருவார்கள். மற்றவர்களை நாடிச் சென்ற நிகழ்வு எப்போதும் கிடையாது.

ஸ்டாலின் சொல்கிறார், தான் வெளியிலே செல்கின்ற பொழுது, மக்களை பார்க்கின்ற பொழுது, இளைஞர்கள் என்னை அப்பா என்று அழைக்கிறார்கள் என்று சொல்கிறார். புதிதாக கண்டுபிடித்து இருக்கிறார் அப்பா என்று. மக்கள் கேட்கிறார்கள். குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தும் போது கதறல் சத்தம் அப்பா, அப்பா.. அப்பா என்று கதறும் சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா? மூன்று வயது சிறுமியிலிருந்து பள்ளிகளில் படிக்கிற சிறுமி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிற பொழுது கதறுகிற சத்தம் திரு. ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா?"தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அப்பா… அப்பா… என்று கதறுகிற அந்த கதறலுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? ஜனவரி முதல் 16-2- 2025 வரை சுமார் 117 போக்ஸோ வழக்குகள் தமிழகத்தில் பதியப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 56 பெண்கள் பாதிக்கப்பட்டதாக பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி என்றால் இரண்டே வாரத்தில் எவ்வளவு சிறுமிகள், 18 வயதுக்கு குறைவானவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த கதறல்ல் சத்தம், அப்பா, அப்பா அப்பா என்று கதறுகிற சத்தம் ஸ்டாலினின் செவிக்கு எட்டவில்லையா?

திரு மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற பொழுது இந்திய பிரதமர் மோடி சென்னைக்கு வந்திருந்தார். அப்போது கருப்பு பலூனை பறக்க விட்டார். கோ பேக் மோடி என்று சொன்னார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். இப்பொழுது வெல்கம் மோடி என்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோ பேக் மோடி. கருப்பு பலூன் விட்டார். எதிர்ப்பை பிரதிபலித்தார்.

ஆளுகின்ற கட்சியாக வருகிற பொழுது ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த காரணத்தினால் பயத்திலே வெல்கம் மோடி என்கிறார். அது மட்டுமல்ல வெள்ளை கொடி பிடிக்கிறார். திரு ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு வெள்ளைக் கொடி வேந்தர் என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்” என்றார் எடப்பாடி பழனிசாமி.

 

MUST READ