Homeசெய்திகள்அரசியல்அதிமுக அவசர செயற்குழு கூட்டம்: மத்திய அரசுக்கு கண்டனம்

அதிமுக அவசர செயற்குழு கூட்டம்: மத்திய அரசுக்கு கண்டனம்

-

அதிமுக அவசர செயற்குழு கூட்டம்: மத்திய அரசுக்கு கண்டனம்மத்திய அரசுக்கு அதிமுக கண்டனம்: அவசர செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் ஹுசேன் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்தில், தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு தேர்தலிலும் அதனை அடுத்து வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலிலும் அதிமுக வெற்றியை பெறுவதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளையும் , அரசியல் யூகங்களையும் , சிறந்த ஒரு கூட்டணியையும் அமைத்து, தேர்தல் வியூகங்களை வகுத்து தமிழக வாக்காள பெருமக்களின் நன்மதிப்பைப் பெற்று உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியையும் அதனை அடுத்து 2026 இல் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுகளுக்கு அரனாக விளங்கி இரவு பகல் பாராமல் தேர்தல் பணிகளை ஆற்றுவது என செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவில்லை, விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதிலும், விலையில்லா பள்ளிச் சீருடைகள் வழங்குவதிலும் மெத்தன போக்கோடு இருந்து வரும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் : டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

மேலும் மின் கட்டண உயர்வினால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மக்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் திமுக அரசு உள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி மாதாந்திர மின் கணக்கெடுப்பையும் செயல்படுத்தாததால்  அடுக்கு முறை (Slab system) கட்டண அடிப்படையில் வீட்டு மின் இணைப்புக்கு, மின் நுகர்வோர் இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  மக்கள் நலனில் அக்கறை இல்லாத  தி.மு.க. அரசு இதை கண்டும் காணாமல் இருந்து வருகிறது.

எனவே, மக்களை இத்துயரத்தில் இருந்து மீட்கும் வகையில், உயர்த்தியுள்ள மின்கட்டணங்களைக் குறைத்து,  மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பை நடத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா  ஆட்சியில் செயல்பட்டு வந்த திருமண உதவித் திட்டமும், அதன் வாயிலாக கொடுக்கப்பட்டு வந்த தாலிக்குத் தங்கம் திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல ஏழை,எளிய குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு  வழங்கப்பட்டு வந்த மடிக்கணினி திட்டம் நிறுத்தம். ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த 2000 அம்மா மினி கிளினிகை ஒரே நாளில் மூடப்பட்டது, இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தாத  திமுக அரசு மற்றும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும், மீன்பிடி உபகரணங்கள், மீனவர்களின் உடமைகள் பறிக்கப்படுவதும், தொடர் கதையாக  இருந்து வருகிறது.

மேலும் மீனவர்கள் வாழ்க்கையில் சோகம் நிறைந்ததாக உள்ளது. இத்தகைய நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் இருந்து வரும் மத்திய அரசையும், திமுக அரசையும் இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

திமுக அரசின் 3ஆண்டு கால ஆட்சி ‘சாதனை ஆட்சி அல்ல, வேதனை ஆட்சியே’

மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ் நாட்டிற்குத் தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும்; போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம்.

மருத்துவக் காப்பீடு பிரீமியத்திற்கு 18 % GST வரியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தபட்டுள்ளது.

வயநாடு நிலச் சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

தமிழ் நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவுக்குக்  திமுக அரசு தான் காரணம். தொழில் வளர்ச்சி குன்றியதற்கான காரணங்களை அறிந்து அவற்றை சரிவர நிவர்த்தி செய்யாத திமுக அரசுக்கு கண்டனம்.

நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கடன்மேல் கடன் வாங்கியும், வரிமேல் வரி விதித்தும், மக்களை  கடனாளியாக்கியது திமுக அரசின் சாதனை தான்.

அதிமுக கழகப் பொதுச் செயலாளர்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வகுத்துத் தருகின்ற தேர்தல் வியூகப்படி, வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும் கழகம் மகத்தான வெற்றி பெறும் வகையில் கழக நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றி, வெற்றிக் கனியைப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் சமர்ப்பிக்க சூளுரை ஏற்றனர்.

MUST READ