Homeசெய்திகள்அரசியல்விஜய் கட்சியை பார்த்து அதிமுகவுக்கு பயமில்லை: செல்லூர் ராஜூ

விஜய் கட்சியை பார்த்து அதிமுகவுக்கு பயமில்லை: செல்லூர் ராஜூ

-

விஜய் கட்சியை பார்த்து அதிமுகவுக்கு பயமில்லை: செல்லூர் ராஜூபாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ள நிலையில் இன்று செல்லூர் ராஜூ செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், விஜய் இப்போது தான் மாநாடே நடத்த போகிறார். அதிமுக வேறப்பா… திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி இருந்தது. அதுபோன்ற எழுச்சி தம்பி விஜய்க்கு இருக்குமா என தெரியாது. விஜய் நிறைய இளைஞர்களை வைத்துள்ளார். ஆனால், மாநாட்டில் கொள்கை அறிவித்த பின்னரே விஜய்யை மக்கள் ஏற்பார்களா இல்லையா என்பது தெரியவரும்.

அதிமுகவுக்கு விஜயை பார்த்து பயமே இல்லை. விஜயின் கட்சியில் முழுக்க முழுக்க திமுக உறுப்பினர்கள் தான் உள்ளனர். அதனால் தான் திமுக தலைவர்கள் விஜயை விமர்சிக்கிறார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருவதாக கூறப்படுவதை பற்றி எழுப்பிய கேள்விக்கு , அண்ணாமலையை பற்றி நான் விமர்சிக்கவில்லை,கூட்டத்திற்கு வந்தவர்கள் தலையை மட்டும் ஆட்டினார்கள்.அதை நாம் எப்படி சொல்வோம்.

பொதுக்கூட்டத்தில் பேசுகையில் தொண்டர்களை பார்த்து என்னப்பா ஆட்டுக்குட்டி மாதிரி தலையாட்டுகிறீர்கள் என்று தான் கேட்டேன்.

சாம்சங் தொழிலாளர்கள் பக்கம் நிற்க வேண்டிய தமிழக அரசு முதலாளியின் வக்கீலாக மாறியுள்ளது- டாக்டர் ராமதாஸ் கண்டனம்

பிஜேபி கட்சியினர் எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளார்களே என்று கேட்டதற்கு, நாங்கள் போருக்கு போகிறோம், எலி பிடிப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என அவர்  கூறி உள்ளார்.

MUST READ