Homeசெய்திகள்அரசியல்அடிமையாகத் துடிக்கும் அதிமுக... சவாரி செய்ய ஆளையே மாற்றிய பாஜக..!

அடிமையாகத் துடிக்கும் அதிமுக… சவாரி செய்ய ஆளையே மாற்றிய பாஜக..!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், திருநெல்வேலியின் பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் ரொம்பவே குஷியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, 2021 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தது. அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்த பாஜக, 4 எம்எல்ஏக்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தது.

ஆனால், சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக – தேசியக் கட்சி கூட்டணி டமால் ஆனது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக முயன்றும் பேரம் படியாமல் போனது. இதனால் தனித்து நின்ற அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பூஜ்ஜியமே மிஞ்சியது. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பாஜகவை கடுமையாகச் சாடி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் டெல்லிக்கு விசிட் அடித்த எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசி வந்தார்.

sengottaiyan

இதனால், பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து விட்டதாக பரவலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதை கண்டு பாஜகவினரும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். குறிப்பாக திருநெல்வேலி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் எப்படியும் அதிமுகவின் முதுகில் ஏறி மீண்டும் சட்டமன்றம் சென்று விடலாம் என்ற கனவில் மிதப்பதாகக் கூறுகிறார்கள்.

nainar nagendran

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி தலைமையில் 2026 தேர்தலை சந்தித்தால் தோல்வி உறுதி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதால், செங்கோட்டையன் தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்க திட்டம் போட்டுள்ளதாகவும் அது குறித்து அமித்ஷா சந்தித்து பேச டெல்லி சொல்கிறார் செங்கோட்டையன் எனக் கூறப்படுகிறது. எப்படியானாலும் அதிமுக மீது சவாரி செய்ய பாஜக தயாராகி விட்டது என்பதையே இந்த டெல்லி பயணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

MUST READ