Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது - முன்னாள் அமைச்சர்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக வாக்குகள் செல்லும் நிலை இல்லை மக்கள் தான் எஜமானர்கள்.அதிமுக வாக்குகளை யாருக்கு செலுத்த வேண்டும் என மக்கள் முடிவெடுப்பார்கள் என முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளாா். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மேலும் அவர் கூறுகையில் – மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குத்தப்பட்ட கோவில்பாப்பாக்குடி, பரவை உள்ளிட்ட பகுதிகளை மாநகராட்சி வரையறைக்குள் இணைக்க கூடாது என முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ வுமான செல்லூர் ராஜூ மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,” மதுரை மாநகராட்சியுடன் பேரூராட்சி, ஊராட்சியை இணைக்க கூடாது என வலியுறுத்தி  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.

கோவில் பாப்பாக்குடி பரவை உள்ளிட்ட பகுதிகள் அப்பகுதி மக்களுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்காது..வரி உயருமே தவிர வசதிகள் கிடைக்காது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மாநகராட்சியில் ஏற்கனவே உள்ள பகுதிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொடுக்க முடியவில்லை, புதிதாக பகுதிகள் இணைக்கப்பட்டால் எப்படி அடிப்படை வசதிகளை செய்து தருவார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் பிற கட்சிகளுக்கு கிடைக்காது.நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக வாக்குகள் செல்லும் நிலை இல்லை மக்கள் தான் எஜமானர்கள்.அதிமுக வாக்குகளை யாருக்கு செலுத்த வேண்டும் என மக்கள் முடிவெடுப்பார்கள்.கடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. திமுக பாடுபட்டது.ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல மக்களை அடைத்து வைத்து ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். அதிலும் எங்கள் பொதுச்செயலாளர் வந்தால் கூடுதல் கவனிப்பு இதையெல்லாம் பார்த்து தான் இந்த முறை நாங்கள் களத்தில் நிற்கவில்லை” என்றார்.

ஈரோடு இடைத்தேர்தலில் சீதா லட்சுமியை ஆதரித்து சீமான் பிரச்சாரம்!

MUST READ