திருவேற்காடு பிரதான சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமான உள்ளதால் நாத்து நட்டு, தூண்டில் போட்டு மீன்பிடித்து, மாடு கழுவியும் ,கப்பல் விட்டும் உயிர்பலி கேட்கும் சாலையை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராட்சத பள்ளங்கள், குளம் போல் சாலையில் மழை நீர், ஆங்காங்கே சாலையில் கழிவு கற்கள் கொட்டியுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணிக்கும் மக்கள் தேங்கிய மழை நீரில் சாலையில் கவிழும் படி பாதி மூழ்கி பயணிக்கும் கனரக இருசக்கர வாகனங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டு கணக்கில் சேதமுற்ற சாலையை சீர் செய்ய திருவேற்காடு நகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அதிமுக சார்பில் நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.