Homeசெய்திகள்அரசியல்மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் இருக்கும் - அமைச்சர் சேகர்பாபு

மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

-

மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் இருக்கும் - அமைச்சர் சேகர்பாபு

பெருமழை வெள்ளத்தை சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும் மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் இருக்கும் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை பாரிமுனையில உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துறைமுகம் மேற்கு பகுதி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இணைகிறது இரு இதயம் – மலர்கிறது புது உதயம் என்ற தலைப்பில் 21 இணையர்களுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமண விழா நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பா.ஜெகதீஷ் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பாடல் ஆசிரியர் பா.விஜய் மற்றும் அரசு ஆர்ட்ஸ் கோபி இணைந்து உருவாக்கிய உதிக்கும் உதயம் என்ற பாடலை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட திமுக இளைஞர் அணி துணைசெயலாளர் எஸ்.ஜோயல் பெற்று கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக இளைஞர் அணி துணைசெயலாளர் எஸ்.ஜோயல், திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக விழா மேடையில் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, பலப்பேரிடம் பணம் இருக்கும் ஆனால் மனமிருக்காது. இந்த திருமணத்தை புரோகிதர் நடத்தி வைத்திருந்தால் வேதங்களை சொல்லி நடத்தி வைத்திருப்பார்.

அடிமைத்தனம் என்பது குடும்ப வாழ்க்கையில் இருந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் தான் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றக்கூடிய திருமண அழைப்பிதழில் ஆணும் பெண்ணும் இணைகிற புதுமை விழா என்று குறிப்பிட்டிருந்தார்.

திமுக இயக்கமென்பது தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தமிழர்களுடைய வாழ்வு மலருவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.

ஐந்தாவது தலைமுறையாக உதயநிதி ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அப்படி உழைக்கும் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு. உதயநிதி ஸ்டாலினை சிறு வயதில் இருந்து பார்கிறேன், பெரியாருக்கு இருக்கும் பகுத்தறிவு, சுய மரியாதை போன்றவைகளை நான் உதயநிதியிடம் காண்கிறேன் என்றார்.

அண்ணாவிடம் இருக்கும் இரு மொழிக் கொள்கையை ஏற்று இன்று தாய் மொழி தமிழிலும் மற்றும் ஆங்கிலத்தில் சரமாரியாக பேசக்கூடிய ஆற்றல் துணை முதல்வருக்கு மட்டுமே உண்டு என்று தெரிவித்தார். உழைப்பு என்று சொன்னால் அது மு.க.ஸ்டாலின் மட்டுமே, அவருக்கு இணை வேறு யாரையும் சொல்லவே முடியாது. ஒரு வேலையை கொடுத்து விட்டால் முதல்வரிடம் இருக்கும் தொடர் முயற்சியை வேறு யாரிடமும் கான முடியாது.

பெரியார், அண்ணா, கருணாநிதி,ஸ்டாலின் ஆகிய நான்கு பேரின் கொள்கைகளையும் கொண்டவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, பெருமழை வெள்ளத்தை சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும் மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் இருக்கும் என்றும எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வேலை இல்லை. அதனால் அறிக்கை வெளியிடுகிறார் என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரியவில்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டவர்கள் மணமக்களுடன் காலை உணவு சாப்பிட்டனர்.

5 இந்திய அணி வீரர்களின் முதல் முறை பிங்க் பால் டெஸ்ட்: பலமாக உள்ள ஆஸி.,அணி

MUST READ