Homeசெய்திகள்அரசியல்விஜய் கட்சியுடன் கூட்டணி..? அண்ணாமலைக்கு என்ன கவலை..? சீமான் திட்டவட்டம்..!

விஜய் கட்சியுடன் கூட்டணி..? அண்ணாமலைக்கு என்ன கவலை..? சீமான் திட்டவட்டம்..!

-

- Advertisement -

”விஜய் கட்சியுடன் கூட்டணி எனக்கு ஒத்துவராது” என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அவர், ”தமிழக அரசு ஆளும் கட்சியாக இருக்கும் போது மோடியை வரவேற்பதும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பதும் சகஜம்தான் . மும்மொழிக் கொள்கையில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு என்ன நிலைப்பாடு? திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் இந்தி இல்லை? எல்லா இடத்திலும் இந்தி உள்ளது. பாஜக இந்தியை திணிக்கிறது, நாட்டை துண்டாட நினைக்கிறது. இந்தி பேசும் மாநிலங்கள் எந்த துறையில் வளர்ந்திருக்கிறது?

இந்திய மொழி இந்தி என்ற சொன்ன பைத்தியக்காரன் யார்? பல மொழிகள் கொண்டு பன்முகத்தன்மையோடு இருப்பது தான் இந்தியாவின் அழகே. நாட்டில் பல மொழிகள் இருக்கும் போது இந்தியை மட்டும் படிக்க கட்டாயப்படுத்துவது ஏன்? அதற்கான சிறப்பு காரணம் என்ன? மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கான காரணம், தேவை என்ன என்பதை யார் விளக்குவார்?

“டிஐஜி வருண்குமார் தனி அரசாங்கம் நடத்துகிறார் , என்னை சீண்டினால் வெறி வரும். பொழுதுபோக்கு களத்தில் தலைவரை தேடுபவர்கள் என்னை தேட மாட்டார்கள். நான் முன்வைக்கும் கோட்பாட்டை நம்புபவர்கள் என்னை பின்தொடர்வார்கள். ஐ.பி.எஸ் படித்தால் போதாது, நன்றாக படிக்க வேண்டும். இந்தி எதற்காக தேவை? என அண்ணாமலையிடம் நேருக்கு நேராக கேட்போம். இந்தி படித்தால் தான் தேசிய ஒருமைப்பாடா? இந்தி கற்க வேண்டும் என சொல்லும் அண்ணாமலை தமிழ் கற்க வேண்டும் என ஏன் சொல்வதில்லை?

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது  - அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாட்டில் எந்த பள்ளியில் தமிழ் முறையாக கற்பிக்கப்படுகிறது? என் மகன் எங்கு படித்தால் அண்ணாமலைக்கு என்ன? என் மகனுக்கு வந்த நிலை யாருக்கும் வர கூடாது என்று தான் போராடுகிறோம். எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோரின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்களா? தேவை என்றால் இந்தி கற்க வேண்டும், இந்தி மட்டுமே கற்க வேண்டும் என கூறுவது ஏன்?

உன் மொழி உனக்கு. என் மொழி எனக்கு. தொடர்புக்கு ஒரு மொழி வேண்டும். அதற்கு ஏற்கனவே ஆங்கிலம் இருக்கு. அப்படியானால் இந்திய அவசியமில்லை. இந்தி எதிர்ப்புக்கு எதிராக பேரணி நடத்தினேன். திமுக எனக்கு அனுமதி எங்கே கொடுத்தது? எந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லையோ, அங்கே அனுமதி கொடுத்தது. உளமாற இந்தியை திமுக எதிர்கிறதா? எதிர்ப்பதானால் எதற்கு சௌகார்பேட்டையில் இந்தியில் பேசி வாக்கு சேமிக்கிறாய்? எதற்காக ஹிந்தியில் சுவரொட்டி வைக்கிறாய்? நீங்கள் நடத்துகிற பள்ளியில் இந்தி மொழி பாடமாக இருக்கிறதா? இல்லையா?

மும்மொழிக் கொள்கையில் திமுகவை நீங்கள் நம்பாதீர்கள். தேர்தலுக்காக நடிக்கிறார்கள். இந்த சிக்கலுக்கு திமுக அன்றே முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். இந்தி திணிப்புக்கு எதிராக போராடி 800-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். ஆனால், 18 பேர்தான் கணக்கில் கட்டப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேரின் உயிர் தியாகமும் உங்களுக்கு பைத்தியக்காரத்தனமாக தெரிகிறதா? ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பவர்கள் என்னை தேட மாட்டார்கள். நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இந்த பொழுதுபோக்கு தளத்தில் தலைவரை தேர்ந்தெடுபவர்கள் என்னை தொடர வேண்டாம்.

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் - போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

தம்பி விஜய் அவர்கள் படத்தில் நடிக்கிறார். அவரது ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். அவர்கள் என்னை தொடர மாட்டார்கள். அது வேறு. எங்கள் அண்ணன் கமலஹாசன் வரும்போது கூடத்தான் அவர் பின்னால் சென்றார்கள். ஒவ்வொருத்தர் வரும்போதும் போவார்கள். ஆனால், எனக்கு என்று இருக்கிற, நாங்கள் எடுத்து வைக்கிற, அரசியல் கோட்பாடு, இதுதான் சரியாக இருக்கும். இதுதான் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் தேவை என்று நினைக்கிறவர்கள் எங்களை பின்தொடரலாம்” என அவர் தெரிவித்தார்.

 

MUST READ