Homeசெய்திகள்அரசியல்வக்ஃப் மசோதாவுக்கு பிரேக் போடுவார்களா?: சந்திரபாபு- நிதீஷ் குமாருக்கு நெருக்கடி

வக்ஃப் மசோதாவுக்கு பிரேக் போடுவார்களா?: சந்திரபாபு- நிதீஷ் குமாருக்கு நெருக்கடி

-

ஜமியத் உலமா-இ-ஹிந்த், வக்ஃபு வாரியதிருத்த விவகாரத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மதச்சார்பற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த ‘ஆபத்தான’ மசோதாவை ஆதரிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஜமியத் கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டு ஊன்றுகோலில் இயங்குகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மத்தியில் பாஜக தலைமையிலான அரசு இயங்கும் இரண்டு ‘ஊன்றுகோல்’ தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பொறுப்பில் இருந்து தப்ப முடியாது என்றும் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது. ‘‘நாங்கள் சந்திரபாபு நாயுடுவை அழைத்துப் பேசினோம். அவர் வருத்தம் தெரிவித்தார். ஆனால் அவரது கட்சியின் துணைத் தலைவர் நவாப் ஜானை அனுப்பினார். இங்கு கூடியிருக்கும் மக்களின் உணர்வுகளை அவர் வெளிப்படுத்துவார் என்பதால் நாங்கள் அதை நேர்மறையாகப் பார்க்கிறோம்.

அனைவரும் ஒன்றிணைந்து வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதை தடுக்க வேண்டும். ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு முஸ்லிம்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த மசோதாவையும் நிறைவேற்ற அனுமதிக்க மாட்டார்’’ எனத் தெரிவித்துள்ளது.

 Waqf

சுதந்திரத்திற்கு முன்பு, காங்கிரஸின் அப்போதைய தலைவர்களான மோதிலால் நேரு மற்றும் ஜஹ்வர்லால் நேரு – சுதந்திரத்திற்குப் பிறகு நாடு மதச்சார்பற்றதாக இருக்கும் என்றும், முஸ்லிம்களின் மத மற்றும் கலாச்சார விவகாரங்களில் தலையிடாது என்றும் ஜமியத்துக்கு உறுதியளித்து இருந்தனர். ஆனால் பாஜக அரசு உத்தரகாண்ட், ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வந்தது. முஸ்லிம்களை அவர்களது மதத்திலிருந்து விலக்கி வைப்பதும், தனிப்பட்ட விடயங்களில் அரசாங்கம் இயற்றும் சட்டங்களை பின்பற்ற வைப்பதும் இதன் நோக்கமாகும் என்றார்.

வக்ஃப் நிலத்தை அபகரிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக 81 வயதான மதானி குற்றம் சாட்டினார். ‘‘டெல்லியில் நிறைய மசூதிகள் உள்ளன. அவற்றில் சில 400-500 ஆண்டுகள் பழமையானவை. இந்த மசூதிகளை கையகப்படுத்த விரும்பும் ஒரு பிரிவு இந்தியாவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான ஆவணங்களை யார் தயாரிக்க முடியும்? வக்ஃப் நிலத்தில் கட்டப்படும் எந்த மசூதியும் வக்ஃபுக்கு சொந்தமானது என்று சட்டம் சொல்கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளைப் புறக்கணித்து வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டால் அதற்கு மத்திய அரசை ஆதரிக்கும் ‘ஊன்றுகோல்’களும் பொறுப்பேற்க நேரிடும்’’ என்று மதானி கூறினார்.

 

MUST READ