சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் புதிய அலுவலகத்தில் இரண்டாவது நாளாக மாவட்ட செயலாளர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
கடந்த மாதம் 28ஆம் தேதி புதுவையில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி மாநில தலைவராக முகுந்தனை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்து ராமதாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சென்னை பனையூரில் புதிதாக ஒரு அலுவலகம் துவங்கியிருப்பதாகவும், நிர்வாகிகள் தொண்டர்கள் அங்கே வந்து தன்னை சந்திக்கலாம் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னதாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று கிருஷ்ணகிரி திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்களை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நாளையும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது .
கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் செய்யப்பட்டது செய்யப்பட்டது தான் என்றும், அதில் மாற்றம் கிடையாது என்றும் ராமதாஸ் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், புத்தாண்டில் அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயல்பாடுகளை வேகம் எடுக்க செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . முகுந்தன் விவகாரத்தில் அன்புமணி நிலைப்பாடு என்ன என்பது தற்போது வரை தெரியாத நிலை நீடிக்கிறது. ஏற்றுக்கொண்டாரா அல்லது முகுந்தனை அன்புமணி நிராகரிப்பாரா என்பது தெரியாத நிலை இருப்பதால், கட்சி
நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பம் அடைந்திருக்கின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் புதிய அலுவலகத்தில் இரண்டாவது நாளாக மாவட்ட செயலாளர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
கடந்த மாதம் 28ஆம் தேதி புதுவையில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி மாநில தலைவராக முகுந்தனை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்து ராமதாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சென்னை பனையூரில் புதிதாக ஒரு அலுவலகம் துவங்கியிருப்பதாகவும், நிர்வாகிகள் தொண்டர்கள் அங்கே வந்து தன்னை சந்திக்கலாம் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னதாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று கிருஷ்ணகிரி திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்களை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நாளையும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது .
கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் செய்யப்பட்டது செய்யப்பட்டது தான் என்றும், அதில் மாற்றம் கிடையாது என்றும் ராமதாஸ் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், புத்தாண்டில் அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயல்பாடுகளை வேகம் எடுக்க செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . முகுந்தன் விவகாரத்தில் அன்புமணி நிலைப்பாடு என்ன என்பது தற்போது வரை தெரியாத நிலை நீடிக்கிறது. ஏற்றுக்கொண்டாரா அல்லது முகுந்தனை அன்புமணி நிராகரிப்பாரா என்பது தெரியாத நிலை இருப்பதால், கட்சி
நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பம் அடைந்திருக்கின்றனர்.இரண்டாவது நாளாக மாவட்ட செயலாளர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
கடந்த மாதம் 28ஆம் தேதி புதுவையில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி மாநில தலைவராக முகுந்தனை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்து ராமதாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சென்னை பனையூரில் புதிதாக ஒரு அலுவலகம் துவங்கியிருப்பதாகவும், நிர்வாகிகள் தொண்டர்கள் அங்கே வந்து தன்னை சந்திக்கலாம் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னதாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்களை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நாளையும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது .
கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் செய்யப்பட்டது, செய்யப்பட்டது தான் என்றும், அதில் மாற்றம் கிடையாது என்றும் ராமதாஸ் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், புத்தாண்டில் அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயல்பாடுகளை வேகம் எடுக்க செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . முகுந்தன் விவகாரத்தில் அன்புமணி நிலைப்பாடு என்ன என்பது தற்போது வரை தெரியாத நிலை நீடிக்கிறது. ஏற்றுக்கொண்டாரா அல்லது முகுந்தனை அன்புமணி நிராகரிப்பாரா என்பது தெரியாத நிலை இருப்பதால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பம் அடைந்திருக்கின்றனர்.
முடிவில் எந்த மாற்றமும் இல்லை.. முகுந்தனுக்கு தான் பதவி.. – ராமதாஸ் திட்டவட்டம்..