Homeசெய்திகள்அரசியல்அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை! கனிமொழிக்கு அண்ணாமலை பதில்

அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை! கனிமொழிக்கு அண்ணாமலை பதில்

-

அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை! கனிமொழிக்கு அண்ணாமலை பதில்

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் தமிழர்களுடைய வாக்கு சேகரிப்பின் போது அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திவிட்டு கன்னட வாழ்த்து பாடலை ஈஸ்வரப்பா ஒலிக்கச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Annamalai wished birthday to DMK MP Kanimozhi..! | திமுக எம்.பி கனிமொழிக்கு  பிறந்தநாள் வாழ்த்து கூறிய அண்ணாமலை..!

இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி கனிமொழி. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?

“கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்” என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்!” என பதிலடி கொடுத்துள்ளார்.

 

 

 

MUST READ