தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திக்கு தெரியாத காட்டில் சிக்கி தவிப்பதாக தாமரை கட்சியினரே முனுமுனுத்து வருகின்றனர். அண்ணாமலையில் பேச்சை நம்பிய டெல்லி பாஜக மேலிடம் ரொம்பவே இடம் கொடுத்தார்கள். அதை வைத்து கட்சியில் இருந்த சீனியர்களை தந்திரமாக ஓரம் கட்டி வந்தார். நான் தான் கட்சி என்ற ஒரு மாயையை கொண்டுவந்துட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கொடியை நாட்டுவேன் என கற்பூரத்தை வைத்து சத்தியம் செய்துள்ளார். இதனால் மூன்று இலக்கத்திலான பெரும் தொகையை டெல்லி தலைமை கொடுத்ததாக கட்சிக்கார்கள் கூறுகிறார்கள். ஆனால் வெற்றிப்பட்டியல் பூஜ்ஜியமாகி போனதால் அவரது ராஜ்ஜியத்தில் இடி. இதனால் தேர்தல் கரன்சி கணக்கை காட்டுங்கள் என டெல்லி மேலிடம் கறார் கட்டியதாக தாமரை தயாளர்கள் கூறுகிறார்கள்.
லண்டன் சென்று திரும்பினால் தன் மீதான கோபம் தணியும் என மனக்கணக்கு போட்டுள்ளார் அண்ணாமலை. அந்த காலக்கட்டத்தில் பெண் எம்எல்ஏ வானதி சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அழைத்து வந்து வியாபாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை கோவையில் நடத்தினார். அதில் ஜிஎஸ்டி விவாதம் பெரும் பிரச்னையை கிளப்பியது.
அந்த வியாபாரியை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், லண்டனில் இருந்து அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். இதனால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரொம்பவே அதிர்ச்சியாகி இருக்கிறார். இதையடுத்தே அவர் அண்ணாமலையை பற்றி பாஜக மேல்மட்ட தலைவர்களிடம் புட்டு புட்டு வைத்துள்ளார்.
அதன்பிறகு அண்ணாமலையை டெல்லி மேலிடம் கண்டுகொள்வதே இல்லை என்கிறார்கள். லண்டனில் இருந்து திரும்பி வந்த பிறகு இருமுறை டெல்லிக்கு சென்றார் அண்ணாமலை. ஆனால் மூன்று முக்கிய தலைவர்கள் இவரை சந்திக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வேதனையில் இருந்த அண்ணாமலை டெல்லியை தன்பக்கம் இழுக்க என்ன செய்யலாம் என்றிருந்த நிலையில்தான், சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டம் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனை தேசிய தலைவரின் கவனத்துக்கு கொண்டு போய் இருக்கிறார்கள். இதனை கேட்ட அவர் தன் தலையில் டமார் டமாரென அடித்துக் கொண்டதாகவும் தகவல். அதேபோல சவுக்கடி காட்சியை கெஞ்சி கேட்டும் மூத்த தலைவர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்ய மறுத்து இருக்கிறார்கள். இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற அண்ணாமலை தலைவர் பதவியாவது, வெங்காயமாவது என அதிருப்திக்கு சென்றதாக பாஜக தமிழக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.