Homeசெய்திகள்அரசியல்அறிவாலயத்தில் அண்ணாமலை ஒரு புல்லை கூட புடுங்க முடியாது - ஆர்.எஸ்.பாரதி ஆத்திரம்..!

அறிவாலயத்தில் அண்ணாமலை ஒரு புல்லை கூட புடுங்க முடியாது – ஆர்.எஸ்.பாரதி ஆத்திரம்..!

-

- Advertisement -

அண்ணா அறிவாலயத்தில் இருந்து அண்ணாமலையால் ஒரு புல்லை கூட புடுங்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.அறிவாலயத்தில் அண்ணாமலை ஒரு புல்லை கூட புடுங்க முடியாது - ஆர்.எஸ்.பாரதி ஆத்திரம்..!

சென்னை, வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலாக உருவம் வரை போகமாட்டேன் என பேசி இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது என்று கூறியுள்ளாா்.

பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் பொய் பேசுவதாக அண்ணாமலை தெரிவித்த நிலையில் இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, ஒரே மேடையில் நேரடியாக விவாதிக்க அண்ணாமலை தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தமிழகத்தில் காவி ஆட்சி மலர்ந்தே தீரும் என்பது ஒரு கற்பனையானது. அது ஊரறிந்த உண்மையாகும். முதலமைச்சர் செல்லும் வழியில் வெடிகுண்டு மிரட்டல் குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் தனது வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தவர், எதையும் சந்திக்கும் ஆற்றல், திறமை அவருக்கு உண்டு என்றார்.

அதிமுக போராட்டம் குறித்த கேள்விக்கு, அதிமுகவை பற்றி கேள்வி கேட்க வேண்டாம் அவர்களே நெருக்கடியில் உள்ளனர். மேலும் அவர்களை பற்றி விமர்சிக்க விரும்பம் இல்லை. ஒன்றிய அரசின் திட்டங்களை நாங்கள் காப்பி அடிக்க வில்லை என்பதோடு, ஸ்டிக்கர் ஒட்டியது யார் என்று உங்களுக்கே தெரியும்.

தவெக தலைவர் விஜய் கட்சிக்கு 15 முதல் 20 சதவீதம் வரை இருப்பது என்ற கேள்விக்கு, அது பற்றி நான் கருத்து கூற விருப்பம் இல்லை. பிரசாந் கிஷோர் சொந்த மாநிலத்திலேயே டெபாசிட் வாங்காதவர் என்று ஆர்.எஸ் .பாரதி விமர்சித்துள்ளாா்.

அறிவாலயத்தை தொட்டால் மண்ணோடு மண்ணாகிப்போவாய்… அண்ணாமலைக்கு சேகர்பாபு பதிலடி..!

MUST READ