அடித்து கொள்வது என்பது ஒருவருக்கு கொடுக்கக்கூடிய ஒரு தண்டனை. அல்லது பாவ விமோசனம். அண்ணாமலை செய்த தவறுகளுக்கு பாவம் விமோசனத்திற்காக சாட்டையால் அடித்துக் கொண்டாரா? என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, இன்று காலை 10 மணிக்கு கோவை நேரு நகரில், தனது வீட்டுக்கு முன் நின்று, அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் ஆறு முறை, அடித்து கொண்டார். அப்போது பா.ஜ., தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பா.ஜ.,வினர் வெற்றி வேல், வீர வேல்’ என கோஷம் எழுப்பினர்.
அடித்து கொள்வது என்பது ஒருவருக்கு கொடுக்கக்கூடிய ஒரு தண்டனை. அல்லது பாவ விமோசனம். அண்ணாமலை செய்த தவறுகளுக்கு பாவம் விமோசனத்திற்காக சாட்டையால் அடித்துக் கொண்டாரா? அல்லது அவர் ஏதாவது தவறு செய்ததற்காக தனக்குத்தானே தண்டனை விதித்துக் கொண்டு சாட்டையால் அவர் அடித்து கொண்டாரா என்பது கேள்வியைத் தவிர திமுக அரசு எந்த பாதகமும் அவருக்கு செய்யவில்லை.
பாஜகவில் பழனி பாதயாத்திரை செல்வதற்காக 40 நாட்கள் காலணி அணியாமல் இருப்பார்கள். அதுபோல் ஆண்டு கணக்காக கூட காலணி அணியாமல் இருப்பார்கள். அதேபோல் அண்ணாமலையும் இரண்டு ஆண்டு மூன்று ஆண்டுகளுக்கு பிடித்துக் கொண்டு அவ்வாறு கூறியுள்ளார். திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை காலணி அணிய மாட்டேன் என்று அண்ணாமலை கூறினால் அவர் வாழ்நாள் முழுவதும் காலணி அணிய முடியாது என புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.
எளிய மனிதர்களின் வாழ்வே அறம்…. ‘திரு. மாணிக்கம்’ படத்தின் திரை விமர்சனம்!