Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை ஒரு பச்சையான சந்தர்ப்பவாதி- விடாமல் தாக்கும் திருச்சி சூர்யா

அண்ணாமலை ஒரு பச்சையான சந்தர்ப்பவாதி- விடாமல் தாக்கும் திருச்சி சூர்யா

-

- Advertisement -

பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டார்.  கள்ளச்சாராய மரணத்தில் பாஜக ஆட்சியை குறித்து திருச்சி சூரியா, அண்ணாமலையை பற்றி X பக்கத்தில் பதிவு.

அண்ணாமலையை குறித்து திருச்சி சூரியா விமர்சனம் ”கள்ளச்சாராய மரணத்தை பொறுத்தவரை மோடி ஆட்சி செய்த காலத்தில் 2009 ல் கள்ளச்சாராய சாவு மட்டும் 139, அதன் பிறகு குஜராத்தில் 2016 ல் 16 பேர், 2019 ல் 20 பேர், 2022 ல் 42 பேர் என கள்ளச்சாராயத்தால் குஜராத்தில் மட்டும் மரணமடைந்திருக்கிறார்கள்.   இந்த செய்திகளை வைத்து, நாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இது போன்ற மரணங்கள் நடந்திருக்கின்றன இணைந்து இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அண்ணாமலை பேசவில்லை.

மாறாக, தமிழ்நாட்டில் ஏதாவது அரசியல் லாபம் பார்க்க முடியுமா என்பதை தவிர, அண்ணாமலைக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.

சமீபத்தில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த ஓரு 9 வயது குழந்தை காமுகர்கள் கொடூரமாக கற்பழித்து கொன்று சாக்கடையில் வீசிச்சென்றார்கள்.  குற்றவாளியில் ஒருவன் கஞ்சா குடிக்கிகள் என்பது கூடுதல் தகவல்.

அதை பற்றி அண்ணாமலை அவர்கள் எதுவும் பேசவில்லை . ஒரு இரங்கல் பதிவு கூட இல்லை. ஏன் என்றால் பாஜக – கூட்டணி ஆளும் மாநிலம்? இது பச்சையான சந்தர்ப்பவாதம் இல்லையா?

இதே விஷயம் தமிழ்நாட்டில் நடந்திருந்தால் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்வார். ஏதாவது அரசியல் லாபம் கிடைக்குமா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடுவார்.

என்னை பொறுத்தவரை பாஜக ஆளும் மாநிலம் , மற்ற கட்சிகள் ஆளும் மாநிலம் என்று வித்தியாசம் இல்லை . அனைவரும் மக்கள் தான் . எந்த கட்சி அரசியல்வாதியானாலும், மக்களின் உரிமைக்காக பேசுங்கள் என்பதுதான் நோக்கம்.  உங்கள் அரசியல் லாபத்திற்கு மக்களை பலிகடா ஆக்காதீர்கள்.”

இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.

MUST READ