அண்ணாமலை அதிகம் படித்தவர்,பள்ளி கல்விதுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யப்பட்ட நிதி குறித்தான தகவல்கள் புள்ளி விபரமாக ஆன்லைனில் உள்ளது. ஆர்.டி.ஐ மூலமும் கேட்டால் அரசு பதில் தரும் தவறு இருந்தால் சொல்லட்டும் அரசு அதனை நிவர்த்தி செய்துவிடும். அரசின் மீது குற்றம் சுமத்த முடியாத காரணத்தினால் அமைச்சர் மூர்த்தி பேச்சை பெரிதாக்குகிறார்கள்.ஆண்ட பரம்பரை என சொல்லகூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என நெல்லையில் அப்பாவு பேட்டி அளித்துள்ளாா்.
தமிழக அரசின் வேர்களை தேடி திட்டத்தின் மூலம் மூன்றாவது குழுவாக அமெரிக்கா மலேசியா உகாண்டா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் இருந்து 38 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். கன்னியாகுமரி தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அவர்கள் தமிழக பாரம்பரியம் உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .அதன்படி நெல்லை வந்த அவர்கள் நெல்லையப்பர் கோவில் வ.உ.சி.மணிமண்டபம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர். வ.உ. சி.மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ,நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் தமிழக வரலாற்றில் நெல்லை என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்து உரையாடினார்கள்.
அதை தொடர்ந்து சட்டபேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் தமிழ் நாட்டின் அருமை,பெருமை பாரம்பரியம் தமிழ்மொழியின் நாகரிகம் தமிழகத்தின் ஆலயங்களை பார்வையிட வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசால் – வேர்களை தேடி என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவரை 150 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் தமிழகம் வந்த நிலையில் 3 வது குழுவில் 38 பேர் தமிழகம் வந்து பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துள்ளனர்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக, தமிழக அரசு சார்பில், அமைச்சகத்தை தொடங்கி அதற்காக அமைச்சரையும் நியமித்துள்ளது. அதேபோல் திமுக சார்பில் ,அயலக அணி தொடங்கி வெளிநாட்டில் உள்ள தமிழர்களுக்கு இடர்பாடுகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யது சட்டரதீயான நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். பக்ரைன் சிறையில் இருந்த தமிழக மீனவர்களை தமிழக முதலமைச்சரின் முயற்சியால் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
தமிழ் மற்றும் தமிழகத்தின் பெருமைகள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வரின் முயற்சி பாராட்டுக்குரியது, நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலாக்க கூடாது என குஷ்பூ சொன்ன கருத்தை வரவேற்கிறோம். அரசின் கவனத்திற்கு தவறு நடந்த விஷயம் சென்றவுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடந்து வருகிறது. காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது நல்ல நியாயம் கிடைக்கும். தமிழக அரசு விருப்பு வெறுப்பில்லாமல் ஆட்சியை நடத்தி வருகிறது. யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அரசு தமிழகத்தில் நடந்து வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கடும்பாதகமான செயலை செய்த பாதகனை உடனடியாக காவல்துறை கைது செய்துள்ளது, மேல் விசாரணை நடந்து வருகிறது. முழு விசாரணை முடிந்த பின்பு சரியான நடவடிக்கை அரசால் எடுக்கப்படும் அதனை அனைவரும் பாராட்டுவார்கள்.அமைச்சர் மூர்த்தி என்ன சூழலில் ஆண்ட பரம்பரை என்று பேசினார் என்பது தெரியவில்லை . ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு என சொல்வார்கள் எங்கள் சமூகம் தான் நாட்டை ஆண்டது என சொல்வது வழக்கம் ,அதனை சொல்லக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
எந்த அடிப்படையில் மூர்த்தி பேசினார் என்பது தெரியவில்லை இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் எந்த குற்றமும் நடக்கவில்லை.இது போன்ற பேச்சை வைத்தாவது குற்றத்தை சுட்டிக்காட்டலாம் என சிலர் சொல்லி வருகிறார்கள். பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணல் அம்பேத்கர் குறித்து பேசிய கருத்துக்களை அனைத்து அரசியல் கட்சியினரும் எதிர்த்த நிலையில் ஆளுங்கட்சியான பாஜக ஏ.ஐ தொழில்நுட்பத்தை வைத்து அவர் பேச்சை திருத்தி விட்டார்கள் என சொன்னார்கள். பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் பேசியதையே திருத்தினார்கள் என்றால் அமைச்சர் மூர்த்தி சொன்னதில் என்ன குறை கண்டுபிடித்தீர்கள் என்று தெரியவில்லை.
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு 44,042 கோடி நிதி ஒதுக்கி இருக்கும் நிலையில் அந்த நிதி எங்கு சென்றது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்கிறார் அதனை ஆர் டி ஐ -ல் கேட்டால் முழு விபரமும் அரசு தரும்.அண்ணாமலை மிகவும் படித்தவர் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கு சென்றது என ஆன்லைனில் பார்த்தால் புள்ளி விபரமாக அதில் இருக்கும் அதனை பார்த்துக் கொள்ளலாம்.அதில் எதுவும் தவறு இருந்தால் அண்ணாமலை சொல்லட்டும் அதை அரசு நிவர்த்தி செய்து விடும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள ஆறு பல்கலைக்கழகத்திற்கு வேந்தர்கள் இல்லாமல் உள்ளனர். அரசு என்பது சட்டத்தின்படி விதிப்படிதான் நடக்கக் கூடியது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவில் மூன்றின் கீழ் கல்வி ஒத்திசைவு பட்டியலில் உள்ளதால் மாநில அரசுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. ஆளுநருக்கும், வேந்தருக்கும் எதிரான முடிவை எடுக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் அரசுக்கு இல்லை. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யுஜிசி இன் நிதி வழங்கப்படாமல் உள்ளது.
தமிழக பல்கலைக்கழகங்கள் கடும் நீதித் தட்டுப்பாட்டில் உள்ளது. துணை வேந்தர் நியமனங்களுக்கு பரிந்துரை செய்யும் யுஜிசி பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை கொடுத்திருக்கலாம். நவீன காலத்திற்கு ஏற்ப தனியார் நிறுவனங்களுடன் கல்வி நிலையங்களை இணைத்து செயல்படுவது மாணவர்களின் எதிர்கால தேவைக்கு அவசியமானது. தமிழக அரசு பள்ளி கல்லூரிகளை ஒருபோதும் தனியார் மயமாக்காது. 500 பள்ளிகளை தத்து கொடுப்பதால் கல்வி நிலையங்கள் தனியார் மயம் ஆகாது என தெரிவித்தார்.
அண்ணாமலையை தூக்கத் துடிக்கும் சீனியர்கள்… பாஜகவுக்கு நல்லதல்ல… எச்சரிக்கும் விமர்சகர்கள்..!