டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை வைத்து அண்ணாமலை அரசியல் செய்ய பார்க்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு. ஒன்றிய அரசு வெகுஜன மக்களுக்கான அரசாக இல்லாமல் முதலாளித்துவ அரசாக செயல்படுவதாகவும் புகார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று அக்கிராமத்திற்கு சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆதரவு தெரிவித்து பேசினார்.
மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்திற்கு சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் அப்பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.
‘அம்பேத்கரை தோற்கடிக்க முயன்ற காங்கிரஸ்…’: திமுகவுக்கு பாடம் எடுத்த பாஜக எம்.பி
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இத்திட்டத்திற்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்த போதும் ஒன்றிய அரசு அதனை மதிக்காமல் தொடர்ந்து ஏல ரத்து அறிவிப்பை செய்வதற்கு கால தாமதம் செய்து வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்தத் திட்டத்தை வைத்து அரசியல் செய்யவே பார்க்கிறார் என்றும் ஒன்றிய அரசிடம் கூறி உடனடியாக இந்த திட்டத்திற்கான ஏலத்தை ரத்து செய்ய அவர் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்தவர்.
இதன் மூலம் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு ஒன்றிய அரசு தான் காரணம் எனவும் தெரிவித்தார்.மேலும் ஒன்றிய அரசு வெகுஜன மக்களுக்கான அரசாக இல்லாமல் முதலாளித்துவ அரசாக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.
இரா.முத்தரசன் அவர்கள் அரிட்டாபட்டி கிராமத்திற்கு வந்திருந்த போது கொட்டும் மழையும் பொருட்படுத்தாது ஏராளமான பொதுமக்கள் குடையை பிடித்தபடி நின்று அவரது உரையை கேட்டனர்.