Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை + செங்கோட்டையன் + ஓ.பி.எஸ் + டிடிவி + பாமக.. பாஜக இணைக்கும் பகீர்...

அண்ணாமலை + செங்கோட்டையன் + ஓ.பி.எஸ் + டிடிவி + பாமக.. பாஜக இணைக்கும் பகீர் கூட்டணி..!

-

- Advertisement -

நேற்று மதுரை சென்று அங்கிருந்து டெல்லிக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், நிர்மலா சீதாராமனையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில், அதை புறக்கணித்துவிட்டு நேற்று காலை 9.56 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் இருந்து செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டார். இன்று காலை 8.40 மணிக்கு டெல்லியில் இருந்து மீண்டும் மதுரை வழியாக வந்து உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அப்போது கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், தம்பிதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆனால், கூட்டணி குறித்து பேசவில்லை என மறுத்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், செங்கோட்டையன் நேற்று அமித் ஷாவையும், நிர்மலா சீதாரமனையும் சந்தித்து பேசியது அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோரும் டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் கருத்து வேறுபாட்டில் செங்கோட்டையன் உள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜக தலைவர்களை செங்கோட்டையன் சந்தித்துவிட்டு வந்து உள்ளது அரசியல் கேள்விகளை எழுப்பி உள்ளது.

மோடிக்கு அடுத்தபடியாக மத்திய அமைச்சரவையில் இரண்டாவது, மூன்றாவது படிநிலையில் இருக்கும் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் சந்திப்பது, அதுவும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சந்திப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதவியின்றி இரண்டு மூத்த அமைச்சர்களை ஒரே நாளில் சந்திப்பது முடியாத காரியம் என்று அரசியல் புரிதல் இருப்பவர்களுக்கு தெரியும்.

இரண்டு நாட்களுக்கு முன் எடப்பாடியுடன் சென்ற அதிமுக குழுவுடன் சேர்ந்து போகாமல் செங்கோட்டையன் தனியாக போய் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்து இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவுடன் கூட்டணி தொடர்பாக பேசும் போது அதிமுக தரப்பில் சில நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. அதிமுகவை ஒன்றிணைக்க அழுத்தம் தரக்கூடாது. அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நிபந்தனைகளை விதித்துள்ளார். இதனை அமித் ஷா ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது  - அண்ணாமலை கண்டனம்

அதன்பிறகே அண்ணாமைலை அமித் ஷா டெல்லிக்கு அழைத்துப் பேசியுள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக குறித்து ஆலோசனை நடந்திருக்கிறது. அதன்பிறகே இது குறித்து விவாதிக்க செங்கோட்டையனை டெல்லி பாஜக தலைமை அழைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அண்ணாமலை + செங்கோட்டையன் + ஓ.பி.எஸ் + டிடிவி + பாமகஅன்புமணி + வாசன் + ஜான் பாண்டியன் + ஏசி சண்முகம் + ஐஜேகே போன்ற கட்சிகளை கூட்டணியில் இணைத்து பாஜக களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

MUST READ