Homeசெய்திகள்அரசியல்இஃப்தார் நோன்பில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: விஜய் மீது போலீஸில் பரபரப்பு புகார்..!

இஃப்தார் நோன்பில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: விஜய் மீது போலீஸில் பரபரப்பு புகார்..!

-

- Advertisement -

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியை சீர்குலைத்த நடிகர் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு சுன்னத் ஜமா-அத் அமைப்பின் மாநில பொருளாளர் செய்யது கவுஸ் அளித்துள்ள புகாரில், ”கடந்த, 7 ம் தேதி, சென்னை ராயப்பேட்டை, ஒய்எம்சிஏ, திடலில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் பங்கேற்றார். அப்போது, கொஞ்சமும் மனிதத்தன்மையே இல்லாமல், நோன்பு வைத்திருக்கும் முஸ்லிம்களை பாதுகாவலர்கள் தாக்கி உள்ளனர்.

விஜய் ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் இழிவுபடுத்தப்பட்டனர். நோன்பு இருக்காத, இஃப்தாருக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத குடிகாரர்கள், ரெளடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றது அவமதிப்பாக கருதுகிறோம்.

எங்களின் பண்பாட்டு நிகழ்ச்சியை அவமதித்துள்ளனர். சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல், வெளிநாட்டு பாதுகாவலர்கள் மூலம் அங்கிருந்தவர்களை விலங்குகளை போல் நடத்தியுள்ளனர். மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

MUST READ