Homeசெய்திகள்அரசியல்'கோட்டையை முற்றுகையிடுவது தமிழன் மரபு ... வீட்டை முற்றுகையிடுவது திராவிடன் மரபு...' சினம் கொண்ட சீமான்..!

‘கோட்டையை முற்றுகையிடுவது தமிழன் மரபு … வீட்டை முற்றுகையிடுவது திராவிடன் மரபு…’ சினம் கொண்ட சீமான்..!

-

- Advertisement -

பெரியாரை விமர்சித்து பேசியதைக் கண்டித்து சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த திராவிட அமைப்புகள் திட்டட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேநேரத்தில் நாம் தமிழர்கட்சியினர் சீமான் வீட்டுக்கு பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.

அங்கு செய்தியாளர்களை சந்திட்த்ஹ சீமான், ”பெரியாரை உலகத்திலேயே அதிகமாக விமர்சித்த கட்சி திமுக தான். என்னை தமிழக மக்களிடம் மிகவும் கொண்டு சேர்த்து விடுவதும்ம் திமுக தான். என்றைக்காவது என் கட்சித் தொண்டன் எட்டு எட்டு போஸ்டர் எனக்கு ஒட்டி இருக்கிறானா? திமுக என்னை எதிர்க்கிறோம் என்ற பெயரில் போஸ்டர் அடித்து எனக்கு தமிழகம் முழுதும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.அம்பேத்கரையும், பெரியாரையும் ஒன்று என்று பேசிக் கொண்டிருந்த பெருமக்களே… உங்கள் எல்லார் வீட்டிலேயும் பெரியார் படம் இருக்கிறது… ஆனால் அண்ணல் அம்பேத்கர் படம் இருக்கிறதா..? உங்களுக்குள் இருக்கிற தீண்டாமையை முதலில் ஒழித்துவிட்டு வெளியில் வாருங்கள்.

பெரியாரிஸ்ட்களின் எல்லார் வீட்டிலும் பெரியார் படம் இருக்கிறது. ஆனால் அண்ணல் அம்பேத்கர் படம் இருக்கிறதா? மனச்சாட்சியிடம் கைவைத்து சொல்லுங்கள். அப்புறம் எப்படி அம்பேத்கரும், பெரியாரும் ஒன்று என்கிறாய். பெரியார் எழுதியது, பேசியது எல்லாம் தமிழர்களுக்கு எதிரானது, தமிழ் மொழிக்கு எதிரானது. அதைச் சான்றோடு நிரூபிக்கிறேன்… நாம் கேட்பதற்கு பதில் சொல்வதில்லை. அதற்கு பதிலாக அவதூறாக கிளப்பி விடுகிறார்கள். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அவர்தான் எங்க அப்பத்தாவுக்கு ஜாக்கெட் போட்டுவிட்டவர்.அவரிடம் நான் கேட்கிறேன். கருணாநிதியின் அம்மாவுக்கு ஜாக்கெட் போட்டு விட்டிருக்கலாமே… அவங்களை தவிக்கில்லாமல் உட்கார்ந்து இருக்கிறார்களே உங்களுடைய தலைவரின் அம்மாவுக்கு ரவிக்கை இல்லையே..

இப்படி தேவையில்லாமல் பேசக்கூடாது. ஒரு வரலாறு கூட தெரியாமல் எப்படி ஒரு கட்சியின் அமைப்புச் செயலாளராக இருக்கிறீர்கள் ஆர்எஸ் பாரதி.. நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தால் நீங்கள் வழக்கு போட்டு இந்த கட்சியும் முடக்குங்கள் பார்ப்போம். நான் ஒரு தமிழன். என் கட்சிக்கு நாம் தமிழர் என்று பெயர் வைத்திருக்கிறேன். உனக்கெல்லாம் திராவிடம் என்றால் என்ன? நீ என்ன மொழி பேசுகிறவன் என்றே தெரியாது. நீ என் நாட்டில் இருந்து கொண்டு திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்திருக்கிறாய். நான் ஒரு தமிழாக இருந்து நாம் தமிழர் என்று வைக்கக் கூடாதா?

நீங்க ஏன் என்னுடன் சண்டைக்கு வருகிறீர்கள். அப்பாவையும், மகனையும் வரச் சொல்லுங்கள். முதல்வரையும், துணை முதல்வரையும் வரச்சொல்லுங்கள். ஏன் அவர்கள் இரண்டு பேருக்கும் பேச வராதா? இங்கே என் வீட்டை முற்றுகையிட்டு போராடுவதற்காக நான் கட்சி தொடங்கவில்லை. இவர்கள் என் எதிரி இல்லை. என்னை எதிர்க்கிற எல்லாரும் எதிரிகள் இல்லை. நான் யாரை எதிர்க்கிறோனோ அவர்கள் மட்டுமே எதிரி. கருணாநிதி மகனா? பிரபாகரனின் பிள்ளையா? ஸ்டாலினா? சீமானா? வா நேருக்கு நேர் போட்டி போடுவோம். பெரியாரின் கைத்தடியா? பிரபாகரனின் துப்பாக்கியா? வா யுத்த களத்திற்கு வந்துவிட்டதல்லவா? நீ அங்கே பிரபாகரனை பேசு… நான் பெரியாரை பேசுகிறேன்” என சவால் விட்டு அழைத்துள்ளார் சீமான்..!

MUST READ