Homeசெய்திகள்அரசியல்இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை - அண்ணாமலை

இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை – அண்ணாமலை

-

இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை - அண்ணாமலை

இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று  தாக்கல் செய்யப்பட உள்ளது.

கணவன், மனைவி பெயரில் தனித்தனியான ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் – எம்எல்ஏ அசோகன்

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் ”கடந்த 2023 ஆம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை.

திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, ₹2,000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்தீர்கள். இத்தனையும் செய்து விட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல், தண்டனைகள் கடுமையாக இல்லை என்று திருத்த மசோதா கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை” என விமர்சித்துள்ளார்.

MUST READ