Homeசெய்திகள்அரசியல்அரசியல் ஆதாயம் தேடவே அதிமுக, பாஜக குற்றம்சாட்டுகிறது - ஆர்.எஸ்.பாரதி

அரசியல் ஆதாயம் தேடவே அதிமுக, பாஜக குற்றம்சாட்டுகிறது – ஆர்.எஸ்.பாரதி

-

கள்ளக்குறிச்சிக்கு சென்று, அங்குள்ளவர்களை முதலமைச்சர் நிச்சயம் சந்திப்பார் என தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அரசியல் ஆதாயம் தேடவே அதிமுக, பாஜக குற்றம்சாட்டுகிறது - ஆர்.எஸ்.பாரதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளக்குறிச்சி சம்பவம் எதிர்பாராது நடந்த ஒன்று என்றார். இதில் கடந்த ஆட்சியில் நடைபெற்றது போல இல்லாமல் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி இதில் ஆதாயம் தேட தவறான கண்ணோட்டத்தில் அணுகுகவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்கட்சியினர்க்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என பாரதி கேட்டுக் கொண்டார்.

அரசியல் ஆதாயம் தேடவே அதிமுக, பாஜக குற்றம்சாட்டுகிறது - ஆர்.எஸ்.பாரதி

பாஜக, அதிமுகவை சார்ந்தவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன என்றும் இதில் உண்மை நிச்சயம் வெளிவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதை பற்றியெல்லாம் தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சிக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார்.

கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி சட்டமன்றத்திலேயே விவாதிக்கலாம் என முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்த போதும், கேள்வி கேட்பதற்கு கூட வராமல் நாடகமாடி எடப்பாடி பழனிச்சாமி சென்று விட்டதாக பாரதி விமர்சித்தார்.

அரசியல் ஆதாயம் தேடவே அதிமுக, பாஜக குற்றம்சாட்டுகிறது - ஆர்.எஸ்.பாரதி

சாராயம் எப்போது வந்தது என்ற வரலாறு நிர்மலா சீதாராமனுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பிய அவர், 1971-ல் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது என்றும் விளக்கினார். 1971லிருந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க திமுகவின் பொதுக்குழுவை கூட்டி மதுவிலக்குக்காக மதுக் கடைகளை அரசே நடத்தலாம் என முன்மொழிந்தவர் மறைந்த எம்.ஜி.ஆர். என்றும் திமுக மீது பழி சொல்ல வேண்டும் என்பதற்காக நிர்மலா சீதாராமன் பேசுவதாகவும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

1972 இல் திறக்கப்பட்ட மதுக்கடைகள் 1973 திமுக ஆட்சியில் மூடப்பட்டது. இது திட்டமிட்டு மறைக்கப்படுவதாகவும் பாரதி புகார் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிசாமி போன்றோர் முழு பூசணிக்கையை சோற்றில் மறைக்கிறார்கள் என்றும் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் தடை செய்யப்பட்ட குட்கா விவகாரத்தில் அன்றைக்கு அமைச்சராக இருந்தவர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது குறித்து கைப்பற்றப்பட்ட டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் ஆர்.எஸ்.பாரதி சுட்டிக்காட்டினார்.

அரசியல் ஆதாயம் தேடவே அதிமுக, பாஜக குற்றம்சாட்டுகிறது - ஆர்.எஸ்.பாரதி

இந்த விவகாரம் குறித்து சிபிஐ இயக்குனரிடம், நானும் ஈவிகேஎஸ் இளங்கோவனும் நேரில் சென்று புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட பாரதி, கள்ளக்குறிச்சி விவகாரத்தை திசை திருப்பவே சிபிஐ விசாரணை கேட்பதாகவும் விமர்சித்தார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் மூன்று ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் செந்தில்நாதனுக்கு கள்ளச்சாராயம் விற்றது தெரியாதா? என வினவிய அவர்,
அப்படி செந்தில்நாதன் தெரிவித்திருந்தால் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பார் என்றார்.

திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கப்படுவதாகவும் திமுகவிற்கும் இதற்கும் தொடர்பு உள்ளது என சொல்பவர்களுக்கு, பாஜக ஆளும் பாண்டிச்சேரி, ஆந்திராவில் இருந்து தான் மெத்தனால் வந்ததாக கூறப்படுவதால் இதில் பாஜகவுக்கே தொடர்பு உள்ளது என்றும் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டினார்.

இனி என் மறுபக்கத்தை பார்ப்பார் : திருச்சி சூரியா (apcnewstamil.com)

சம்பவம் நடந்த அடுத்த நிமிடத்தில் இருந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை பட்டியலிட்ட பாரதி, முதமைச்சர் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வினா தொடுத்தார்.

சம்பவம் நடந்த பிறகு சாராயப் பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி, இதன் மூலம் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதை ஒத்துக் கொள்வதாக பாரதி பேசினார்.

கள்ளக்குறிச்சி மக்களுக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் நன்றாக தெரியும் என்றும் யார் யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்த பட்டியல் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

விஷச்சாராய விவகாரம்: தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் (apcnewstamil.com)

பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திலும் குஜராத்தில் பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்தபோதும் 130 பேர் விஷச்சாரயம் குடித்து இறந்ததற்கு ஏன் சிபிஐ விசாரணை நடத்தவில்லை என்றும் கும்பகோணம் மகாமக குளத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் குளித்த நிகழ்வில் பலர் இறந்ததற்காக ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி பழனிச்சாமி மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திற்கு வந்து பேசலாம் என அழைப்பு விடுத்த அவர், அதனை சந்திப்பதற்கு முதலமைச்சர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆளுநர் இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என பார்ப்போம் என்று சவால் விடுத்த பாரதி, கமலாலயம் பாஜகவின் பெரிய தலைமையகம் என்றும் ஆளுநர் மாளிகை சின்ன கமலாலயம் என்றும் விமர்சனம் செய்தார்.

அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமை – அண்ணாமலை (apcnewstamil.com)

முதலமைச்சர் நிச்சயமாக கள்ளக்குறிச்சிக்கு சென்று மக்களை சந்திப்பார் என உறுதியளித்த ஆர்.எஸ்.பாரதி, நடந்த தவறுக்குரிய தண்டனை, தவறிழைத்தவர்களுக்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். கள்ளச்சாரய விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணவே, ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற எம்ஜிஆர் பாடல் போல “குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது”, என்ற வாசகத்தை எடுத்துரைத்து, செய்தியாளர்கள் உடனான சந்திப்பை நிறைவு செய்தார்.

MUST READ