அண்ணாமலையின் லண்டன் பயணம்- பரபரப்பு பின்னணி
ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனையை பற்றி பேசுவதற்காக 6 நாள் பயணமாக தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் புறப்பட்டு சென்றார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து 22.06.2023 அதிகாலை 4.30 மணி அளவில் சென்னையிலிருந்து துபாய் வழியாக லண்டன் செல்லும் விமானம் மூலம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புறப்பட்டு சென்றார். இந்த பயணம் 6 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
2024 வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி , இந்தியாவில் ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. அதேபோல் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து அண்ணாமலை பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அமெரிக்காவிற்கு தனிப்பட்ட முறையில் படிப்பு சம்பந்தம் ஆக சென்றுவந்தது போல் இந்த பயணம் தனிப்பட்ட பயணமாக இல்லாமல் கட்சி பயணமாக செல்வதாக பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மோடியின் புகழை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அங்குள்ள தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்லவே இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக பணியாற்றிவருவது குறிப்பிடதக்கது.