Homeசெய்திகள்அரசியல்அதிமுக - பாஜக கூட்டணியை மேலிடம் தான் முடிவு செய்யும்- அண்ணாமலை

அதிமுக – பாஜக கூட்டணியை மேலிடம் தான் முடிவு செய்யும்- அண்ணாமலை

-

- Advertisement -

அதிமுக – பாஜக கூட்டணியை மேலிடம் தான் முடிவு செய்யும்- அண்ணாமலை

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர வேண்டிய நிலை உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

annamalai

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பிறந்த நாளை முன்னிட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஆன்லைன் சூதாட்டம் மசோதாவிற்க்கு ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் கூறியுள்ளேன். 2 வது முறை அனுப்பப்படும் மசோதாவில் ஆளுநர் நிச்சயம் கையெழுத்திட வேண்டும். அதற்கு பிறகு எதை நோக்கி அந்த மசோதா நகர்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

கூட்டணி வேண்டும் வேண்டாம் என்பதில், தான் நிலைப்பாடு எடுக்க முடியாது, அதிமுக – பாஜக கூட்டணியை மேலிடம் தான் முடிவு செய்யும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது. தேசிய கட்சி தமிழகத்தில் தேவை என மக்கள் நினைக்கின்றனர். பள்ளி, கல்லூரி என தவறு எங்கு நடந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எதிர் கட்சிகளுக்கு எந்த வேலையும் இல்லாததால் அதானி விவகாரத்தை கையில் எடுத்து பேசிவருகின்றன. பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி முற்றுகையிடுவது நகைச்சுவையாக உள்ளது. பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு தான் தமிழகத்தில் காங்கிரஸ் வளர வேண்டிய நிலை உள்ளது” என விமர்சித்தார்.

MUST READ