எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலை
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கு பிரச்னை இருக்கா ? இருக்கலாம். ஆனால், அதுவும் எனக்கு தெரியாது. இதில் தெளிவாக உள்ளோம். தன்மானத்தை விட்டுக் கொடுத்து என்னால் அரசியல் செய்ய முடியாது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது சகஜம்தான். அடிப்படையில் கொள்கை ரீதியாக கட்சிகள் வேறுபட்டுள்ளன. நான் யாரையும் எங்கையும் தவறாக பேசவில்லை. என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது. எனது தன்மானத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். நான் யாரையும், எங்கும் தவறாக பேசவில்லை. மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி’ என செல்லூர் ராஜு பேசியதை எப்படி ஏற்க முடியும்? மாநிலத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வரவே நான் தலைவராக ஆகியுள்ளேன்” என்றார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்த 2 நாட்களில் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். பாஜக சார்பில் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படாத நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.