Homeசெய்திகள்அரசியல்கைது செய்யப்பட்டால்தான் கட்சி வளர்ச்சி பெறும்- அண்ணாமலை

கைது செய்யப்பட்டால்தான் கட்சி வளர்ச்சி பெறும்- அண்ணாமலை

-

- Advertisement -

கைது செய்யப்பட்டால்தான் கட்சி வளர்ச்சி பெறும்- அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் 9 ஆண்டு நிறைவு சாதனை பொதுக்கூட்டம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ சார்பில் தாம்பரம், சண்முகம் சாலையில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Image

கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நீட் தேர்வினால் நரிக்குறவர் பெண் டாக்டர் கனவு நிறைவேறியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கான கட்சியாக பாஜக தான். லண்டன் சென்று அங்கு தமிழ்நாட்டிற்கு என்ன சாதனை நடைபெற்றுள்ளது என கூறப்போகிறேன். அதுபோல் கட்சியினரும் பாஜகவின் சாதனைகளை எடுத்து கூறவேண்டும், தமிழகத்தில் 39 தொகுதியிலும் பாஜக கூட்டணி வெற்றிபெற்று பிரதமர் மோடிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

Image

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அனைத்து சிறைகளிலும் ஒரு பாஜகவினராவது இருக்கின்றனர். கைது செய்வதால் பாஜக வளர்ச்சியை தடுக்க முடியும் என நினைப்பது தவறு. கைது செய்யப்பட்டால்தான் கட்சி வளர்ச்சி பெறும். நாங்கள் கைது செய்யப்பட வேண்டுமென்றால் நாங்களே காவல்நிலையம் செல்வோம். கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல பாஜகவினர். கைது செய்தால் தான் கட்சி வளரும். ஒரு நாள் சிறைக்குப் போனால் ஒரு வருட கட்சி பணியை செய்தது போலாகும். திமுகவை கண்டாலே தெறிச்சு ஓடுங்காங்க. முதல்வர் ஸ்டாலினை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் மோடி கடுகளவு கூட குற்றம் செய்யாதவர். அவரை பார்த்து முதலமைச்சர் குற்றம் சாட்டுகிறார்” என்றார்.

MUST READ