தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி விமர்சித்தார். பின்னர் மன்னிப்பு கேட்டார். பின்பு அண்ணாவை பற்றி, பெரியாரை பற்றி, எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுகிறார் அண்ணாமலை.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!
பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். ஜெயலலிதாவை விமர்சித்து மன்னிப்பு கேட்ட நிலையில் அண்ணாமலை, அண்ணாவை விமர்சித்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது. அதிமுக மூலம் தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அடையாளம் உள்ளது. பாஜகவால் நோட்டாவை கூட தாண்ட முடியாது. தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பா.ஜ.க.வுக்கு தான் பாதிப்பு. அதிமுகவின் இந்த அறிவிப்பால் பாஜக மூத்த தலைவர்கள் சந்தோசப்படுவார்கள் என்று கூறினார்.