ஒன்றிய அரசின் செயல்கள் முஸ்லிம்களை அந்நியபடுத்துவதாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணரச்செய்கிறது. மசோதாக்கல் மீதான ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பது பயனளிப்பதில்லை என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் வக்ஃபு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் அளித்த திருத்தங்கள் எதுவுமே இடம்பெறவில்லை என்று திருச்சி சிவா கூறியுள்ளாா்.
மாநிலங்களவையில் வஃக்பு மசோதா குறித்த விவாதத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது, ” வஃக்பு மசோதா அரசியல் சாசனத்திற்கும் மதசார்பின்மைக்கும் எதிரானது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃபு திருத்த மசோதாவை எதிர்த்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாகவே வக்ஃபு திருத்த மசோதாவை எதிர்கின்றோம். நாட்டின் முன்னேற்றத்துக்கு முஸ்லிம்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.
ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்ற கொள்கையை ஒன்றிய அரசு தினிக்கின்றது. தற்போது வக்ஃபு திருத்தச் சட்ட மசோதா நிர்வாகத்தை மேம்படுத்தும் எனக் கூறுவது உண்மைக்கு எதிரானது. வக்ஃபு நிர்வாகத்தை கைப்பற்றுவது தான் இந்த திருத்த மசோதா கொண்டு வந்ததின் நோக்கம். வக்ஃபு மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது, மதச்சார்பின்மைக்கு எதிரானது. பல மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் ஒன்றிய அரசு நினைப்பது சாத்தியம் அற்றது.
சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் கூட 5 கி.மீ. தூரத்தில் உள்ள உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படக் கூடும். அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறுகிறது; முஸ்லிம்களுக்கு மட்டும் வேறு கொள்கையை பாஜக அரசு கடைப்பிடிக்கிறது. முஸ்லிம்களை ஓரம் கட்டுவது, பொது நீரோட்டத்தில் இருந்து விலக்குவதுதான் ஆளும்கட்சியின் கொள்கை. அரசின் செயலால் முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்படுகின்றனர்; பாதுகாப்பு இல்லாதவர்களாக உணர்கின்றனர். மசோதாக்களை ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை.
வக்ஃபு மசோதாவை ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் நடவடிக்கையே அதற்கு எடுத்துக்காட்டு. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் வக்ஃபு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் அளித்த திருத்தங்கள் எதுவுமே ஏற்கப்படவில்லை என்று கூறியுள்ளாா்.