மகாராஷ்டிராவின் புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டே என்ன பங்கு வகிக்கப் போகிறார் என்பதை அரசு பதவிப் பிரமாணம் செய்யும் தேதி நிர்ணயம் செய்யப்பட்டும் கூட சிவசேனாவோ, பாஜகவோ இன்னும் கூறவில்லை.
துணை முதல்வர் மற்றும் பெரிய துறைகளை நீங்களே எடுத்துக்கொண்டு ஈடுபடுங்கள் என்று ஷிண்டேவ்டம் கூறும் பாஜக முதல்வர் பதவியை தன்னுடன் வைத்திருக்க விரும்புகிறது. ஆட்சி பங்கில் அஜித் பவாரையும், ஏக்நாத் ஷிண்டேயையும் துணை முதல்வர் ஆக்க விரும்புகிறது. அஜித் பவாரும் இந்த ஃபார்முலாவை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
ஷிண்டே உள்துறையை கேட்டு வருகிறார். எதிர்காலத்தில் முதல்வர் பதவிக்கான தனது கோரிக்கையை எந்த சூழ்நிலையிலும் கைவிட ஷிண்டே விரும்பவில்லை. தேவேந்திர ஃபட்னாவிஸைப் போல உள்துறையை எடுத்துக் கொண்டு துணை முதல்வரானால், அவரது அந்தஸ்து பெரிதாகக் குறையாது என்று ஷிண்டே தரப்பு நம்புகிறது.
மகாராஷ்டிராவிலும் இதற்கு முன் நாராயண் ரானே, அசோக் சவான், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் முதல்வராகவும், அமைச்சர்களாகவும், துணை முதல்வர்களாகவும் பதவி வகித்துள்ளனர்.
ஷிண்டேவுக்கான துணை முதல்வர் பதவி விவகாரம் மகாராஷ்டிர அரசியலிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. வேறு ஒருவரை துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே நியமிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஷிண்டேவின் சிவசேனாவில் துணை முதல்வர் பதவிக்கு 5 பேர் பெயர்கள் குறித்து விவாதம் நடந்து வருகிறது. முதல் பெயர் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த். ஏக்நாத் துணை முதல்வர் பதவியை ஸ்ரீகாந்த்திடம் ஒப்படைக்கலாம் என பேச்சு அடிபடுகிறது. ஸ்ரீகாந்த் தற்போது மக்களவை எம்.பி.யாக உள்ளார்.
ஸ்ரீகாந்த் தவிர தீபக் கேசர்க்கரின் பெயரும் பேசப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தீபக்குடன் ஏக்நாத் ஷிண்டே நீண்ட ஆலோசனை நடத்தினார். சிவசேனா பிளவுபட்டபோது, ஷிண்டேவுக்கு தீபக் பக்கபலமாக இருந்தார். உதய் சமந்த், குலாப்ராவ் பாட்டீல் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. இது தொடர்பாக பாட்டீல் பகுதியில் சுவரொட்டிகள், பேனர்களும் ஒட்டப்பட்டன.
வெளியில் இருந்து அரசாங்கத்தை ஆதரிக்கும் யோசனை குறித்தும் ஏக்நாத் ஷிண்டே முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஷிண்டேவின் கோரிக்கைகள் அரசில் நிறைவேற்றப்படாவிட்டால் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்தும் பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், ஷிண்டேவின் இந்த முடிவு அழுத்த அரசியலாகவே பார்க்கப்படுகிறது. வெளியில் இருந்து ஆதரவு வழங்குவது என்பது அரசாங்கத்தை ஆதரித்த போதிலும் அமைச்சரவையிலும் மற்ற இடங்களிலும் எந்த ஒரு பங்கையும் எடுக்க மாட்டார்கள்.
இந்த முடிவை எடுப்பதன் மூலம் ஷிண்டே ஒரே நேரத்தில் இரண்டு நெருக்கடிகளைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. முதல் நெருக்கடி அவரது இமேஜ் தொடர்புடையது. ஆனாலும் ஷிண்டே மகாயுதி கூட்டணி அரசில் சேர பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது.
இரண்டாவதாக, ஷிண்டே துணை முதல்வர் பதவியை அவருக்குப் பதிலாக வேறு ஒருவரிடம் ஒப்படைத்தால், சிவசேனாவிற்குள் ஒரு புதிய சூழல் உருவாகும். இதுவும் எதிர்காலத்தில் ஷிண்டேவுக்கு அச்சுறுத்தலாக அமையலாம்.
ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார். ஆனால் ஆட்சியில் தனது பங்கு குறித்து மௌனம் சாதிக்கிறார். உள்துறை அமைச்சகம் மற்றும் பிற அமைச்சர் பதவி கோரிக்கைகள் குறித்து ஷிண்டேவிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டபோது, அவர் எதுவும் பேசவில்லை.
இந்நிலையில், ஷிண்டேவின் மௌனம் இந்த விவாதங்களுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. எனினும், தற்போது அனைவரது பார்வையும் 5ஆம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவை நோக்கியே உள்ளது.