Homeசெய்திகள்அரசியல்அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு - சோனியா

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா

-

எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு -  சோனியா

மக்களவைத் தேர்தலில் 3வது கட்ட வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் 11 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் எஞ்சியுள்ள நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நாட்டு மக்களிடம் பேசும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு -  சோனியா

அதில், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். குறிப்பாக தலித் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் அவர்களுக்கு எதிரான குற்றங்களை அதிகம் எதிர்கொள்வதாகவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கத்தினாலே இத்தகைய சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும், எந்த விலை கொடுத்தும் அதிகாரத்தை பெறுவதில் மட்டுமே பாஜகவின் கவனம் உள்ளது என கடுமையாக குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி அரசியல் ஆதாயங்களுக்காக பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் வெறுப்புணர்வை வளர்த்து வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி வழங்கவும், நாட்டை வலுப்படுத்தவும் எப்போதும் போராடி வருவதாகவும், ஏழைகள் பெண்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் விளிம்பு நிலை சமூகங்கள் உள்ளிட்டவற்றுக்கு வலிமை சேர்க்க காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருவதாகவும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MUST READ