Homeசெய்திகள்அரசியல்மாநிலங்களை ஒடுக்கும் கட்சி பாஜக-வால் ஆபத்து.. மோடியின் திட்டத்தை தோலுரித்த மு.க.ஸ்டாலின்..!

மாநிலங்களை ஒடுக்கும் கட்சி பாஜக-வால் ஆபத்து.. மோடியின் திட்டத்தை தோலுரித்த மு.க.ஸ்டாலின்..!

-

- Advertisement -

தொகுதி மறுசீரமைப்பால் நமது பண்பாடு , அடையாளம், முன்னேற்றம், சமூகநீதி ஆபத்தை சந்திக்கிறது. எப்போதும் மாநிலங்களை ஒடுக்கும் கட்சி பாஜக. சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 6 முதல் 10 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க நெரிடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பேசி முதல்வர் மு.க.ஸ்டாலின், ”நமது மாநிலங்கள் நமக்கு தேவையான நிதியை கொடுக்கக்கூட போராடி வேண்டி வரும். நமது விருப்பம் இல்லாமல், நமக்கான சட்டங்கள் வடிவமைக்கப்படும். நமது மக்களை பாதிக்கும் முடிவுகள் நம்மை அறியாதவர்களால் முடிவு செய்யப்படும். பெண்கள் அதிகாரம் என்பதில் பின்னடைவை சந்திப்பார்கள், மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள்.

உழவர்கள் ஆதரவின்றி பின் தங்குவார்கள். நமது பண்பாடு அடையாளம் முன்னேற்றம் ஆபத்தை சந்திக்கும். காலம் காலமாக போற்றி பாதுகாத்து வரும் சமூக நீதி பாதிக்கப்படும். குறிப்பாக பட்டியலின பழங்குடி மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தொகுதி எண்ணிக்கை குறைத்து அனுமதித்தாலோ, நமது மாநில பிரதிநிதித்துவத்தை குறைக்க அனுமதித்தாலோ நம் சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும். எனவேதான் தொகுதி மறுசீரமைப்பு விகாரத்தை சாதாரணமாக கருதக்கூடாது என்று சொல்கிறேன்.

இன்னொன்றை நான் தெளிவாக சொல்கிறேன். ஜனநாயக பிரதிநிதித்துவத்தை நெறிப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் நாம் எதிர்க்கவில்லை. அந்த நடவடிக்கையானது நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்க கூடாது என்று தான் சொல்கிறோம். இந்த போராட்டம் மறு சீரமைப்புக்கு எதிரானது அல்ல. இந்த போராட்டம் நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்பதை வலியுறுத்துகிறது. எங்கள் கருத்துகளை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இதனை உணர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சி கூட்டத்தை நான் கூட்டினேன்.

தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தற்போது உள்ள 543 மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு 8  இடங்களை இழக்கும் என்று நான் தெரியப்படுத்தினேன். நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் தமிழ்நாடு 12 இடங்களை இழக்க நேரிடும். இது நமது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு நேரடி அடியாக இருக்கும் என்று சொன்னேன்.

மறுநாளே கோயம்புத்தூரில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் விகிதாச்சாரம் அடிப்படையில் தமிழ் நாடு நாடாளுமன்ற இடங்களை இழக்காது என்று கூறினார். உள்துறை அமைச்சரின் விளக்கம் தெளிவாக இல்லை, குழப்பமாகத்தான் இருந்தது. 2023 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் பரப்புரை செய்ய வந்த பிரதமர் மோடி, சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் சமூகங்களுக்கு பிரதிநிதித்துவங்கள் வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி சொல்கிறது.

அடுத்ததாக தொகுதி மறுவரை நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சொல்வதை போல மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இலக்க நேரிடும்.தென்னிந்திய மக்கள் இதனை ஏற்பார்களா? என்று கேட்டார் பிரதமர். இதன் அடிப்படையில் பார்த்தால் தொகுதி எண்ணிக்கை குறையும் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை உணரலாம். எப்போது மாநிலங்களில் மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பாஜக இருந்துள்ளது. அவர்கள் தனது உள்நோக்கத்தை தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தில் செய்ய நினைக்கிறார்கள். இதனை எந்த மாநிலமும் அனுமதிக்க கூடாது. இந்த அச்சுறுத்தலை உணர்ந்து முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.

இதே போன்ற ஒற்றுமையை இங்கு அருகில் உள்ள அனைத்து மாநிலங்களும் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

MUST READ