பாஜகவிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்! அதிமுகவில் இணைந்தனர்
நிர்மல் குமார் தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சமீபத்தில், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், அதிமுகவில் இணைந்தார். அவர் பாஜக தலைவர் அண்ணாமலையை 420 மலை, சொந்த கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. பா. ஜ.க தலைவர் அண்ணாமலை ஒரு மனநோயாளி, பணம் பறிக்கும் குறிக்கோளுடன் செயல்படும் ஒரு மன நோயாளி என்றெல்லாம் விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரும் பாஜக தலைவர் அண்ணாமலையின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலகுவதாக அறிவித்தார்.
அடுத்தடுத்து பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துவருகின்றனர். நேற்று பாஜகவில் இருந்து வெளியேறிய திலீப் கண்ணன் நிர்மல் குமார் தலைமையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இதேபோல் ஈபிஎஸ் முன்னிலையில் பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி அதிமுகவில் இணைந்தார்.