- Advertisement -
நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மீது பாஜக தொண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்திய போது பாஜகவினருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கல் விசி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் காயமடைந்தனர்.
இதற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை,
நாகர்கோவிலில் அமைதியாக இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதல் ஜனநாயகம் மற்றும் போராட்ட சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் இந்த கொடூரமான வன்முறைச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் மற்றும் விரைவான நடவடிக்கையைக் கோருகிறோம் என தெரிவித்துள்ளனர்.